News
இறக்கும் முன்பு டாடா சொன்ன அந்த வார்த்தைகள்.. காலத்துக்கும் நின்னு பேசும்..!
இந்தியாவில் உள்ள முக்கிய பணக்காரர்களில் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. இளம் வயதிலிருந்து தனது டாட்டா குழுமத்தை வளர்த்து வரும் ரத்தன் டாடா இன்று உயிரிழந்திருப்பது பலருக்கும் பெரிய இழப்பாக இருக்கிறது
ஏனெனில் மற்ற தொழிலதிபர்கள் போல வங்கியில் கடன் வாங்கிக் கொண்டு மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றும் தொழிலதிபராக இல்லாமல் தொடர்ந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்தவராக இருந்து வருகிறார் ரத்தன் டாடா.
முக்கியமாக கொரோனா சமயத்தில் கூட நிதி உதவி கேட்ட பொழுது அரசுக்கு 1500 கோடியை நிதி உதவியாக கொடுத்தார். அதேபோல ஒவ்வொரு குடிமகன் வீட்டிலும் ஒரு கார் இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
ரத்தன் டாடாவின் வரிகள்:
எப்படி பில்கேட்ஸ் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணினி இருக்க வேண்டும் ஆசைப்பட்டாரோ அதேபோலதான் ரத்தன் டாடாவின் ஆசையும் இருந்தது இதற்காகவே ஒரு லட்ச ரூபாயில் டாடா நானோ என்கிற காரை அறிமுகப்படுத்தினார் ரத்தன் டாடா.
தற்சமயம் மறைந்து இருந்தாலும் கூட அவருடைய ஒரு வசனம் எப்பொழுதும் நின்று பேசும் வசனமாக இருக்கிறது அது என்னவென்றால் யாராலும் இரும்பை அழிக்க முடியாது ஆனால் அதன் சொந்த துருப்பிடிப்பதால் மட்டுமே அது அழியும். அதேபோல யாராலும் ஒரு நபரை அழிக்க முடியாது அவருடைய சொந்த மனநிலையால் மட்டுமே அது முடியும்.
நம்முடைய தன்னம்பிக்கை தான் நம்மை வளர்த்து விடும் அது போய்விட்டால் நாம் அழிந்து விடுவோம் என்பதை கூறும் விதமாக ரத்தன் டாடா கூறியிருக்கும் இந்த வசனங்கள் இப்பொழுது வைரலாக துவங்கியிருக்கின்றன.
