Tamil Cinema News
ரொம்ப நாளா இருந்த அந்த ஆசை.. விவாகரத்துக்கு பிறகு செய்ய போறேன்.. வெளிப்படையாக பேசிய ரவி மோகன்.!
ஜெயம் ரவி என பரவலாக அழைக்கப்பட்டு தற்சமயம் பெயரை மாற்றியிருப்பவர் நடிகர் ரவி மோகன். நடிகர் ரவிமோகன் சமீப காலமாக நடிக்கும் திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்து வருகிறது.
சமீபத்தில் அவர் நடித்த அகிலன், இறைவன், சைரன் மாதிரியான படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்சமயம் அவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்கிற திரைப்படம் வெளியானது.
அந்த திரைப்படத்தை இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கினார். அந்த திரைப்படமும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதற்கு நடுவே ரவி மோகனின் சொந்த வாழ்க்கையும் அவ்வளவாக சிறப்பாக செல்லவில்லை. அவரது வாழ்க்கையில் அவருக்கும் அவரது மனைவிக்குமிடையே சுமூகமான உறவுகள் நீடிக்கவில்லை.
இதனை அடுத்து இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர். மேலும் ரவி மோகன் வங்கியில் வைத்திருந்த பணத்தையும் அவரது மனைவி கையகப்படுத்திவிட்டதாக கூறப்பட்டது.
இதனால் ரவி கோவாவில் சென்று தங்கி வந்தார். இந்த நிலையில் வெகு நாட்களாகவே தனக்கு இமயமலைக்கு செல்ல ஆசை இருந்து வருவதாகவும் எனவே இமயமலை செல்ல இருப்பதாகவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார் ரவி மோகன்
அடுத்து சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தில் ரவி மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அநேகமாக அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் இமயமலைக்கு கிளம்பலாம் என கூறப்படுகிறது.
