Latest News
ரசிகர்களால் முதல் ஷோவில் நஷ்டம் மட்டும்தான் வருது!.. வேதனையில் ரோகினி திரையரங்க உரிமையாளர்!..
ரசிகர்களை பொறுத்த வரை அவர்களுக்கு முதல் நாள் முதல் ஷோ என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உரிய ஒரு நிகழ்வாக இந்த முதல் நாள் முதல் காட்சி இருக்கிறது.
ஆனால் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாக இருந்தாலும் திரையரங்குகளுக்கு அது திண்டாட்டமாகதான் இருக்கிறது. இடையில் ரோகினி திரையரங்கில் இப்படியான ஒரு சம்பவம் நடந்தது.
லியோ படத்தின் டிரைலர் வெளியான பொழுது அது ரோகினி திரையரங்கில் போடப்பட்டது. அப்போது கிட்டத்தட்ட 400 இருக்கைகள் விஜய் ரசிகர்களால் சேதப்படுத்தப்பட்டன. இதனை அடுத்து கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் செலவு செய்து அந்த இருக்கைகளை சரி செய்துள்ளார் ரோகினி திரையரங்க உரிமையாளர்.
இந்த நிலையில் அவர் பேட்டியில் இது குறித்து கூறும் பொழுது ஒவ்வொரு முறை பெரிய நடிகர்களின் படத்தின் முதல் காட்சிகள் வரும் பொழுதும் அதற்காக நான் சில பவுன்சர்களை வேலைக்கு அமர்த்த வேண்டி இருக்கும் அது மட்டுமில்லாமல் முதல் காட்சி முடிந்து போகும்பொழுதே ஏகப்பட்ட இயற்கைகள் சேதப்படுத்தப்பட்டு இருக்கும். அதனால் முதல் காட்சிகளில் வரும் மொத்த லாபமும் எனக்கு அதற்கு செலவு செய்வதற்கே போய்விடும்.
சொல்லப்போனால் முதல் காட்சியில் எங்களுக்கு எந்த லாபமும் கிடைக்காது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ரோகிணி திரையரங்க உரிமையாளர். திரையரங்கம் இருக்கும் வரை மட்டுமே ரசிகர்களால் ஒரு படத்தை கொண்டாட முடியும் எனவே இப்படியான சேதங்களை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கருதுகின்றனர்