jyothika sai pallavi

10 நிமிஷம் என்னால மூச்சு விட முடியல.. சாய் பல்லவியால் ஜோதிகாவுக்கு நடந்த நிகழ்வு.. பதிவாக வெளியிட்ட ஜோதிகா.!

Sai Pallavi made his debut among South Indian fans with the movie Premam. His recent movie Amaran was better than expected. In this situation, Jyothika has given a review about her performance in this movie

பிரேமம் திரைப்படத்தில் நடித்தது முதலே தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட மதிப்பை பெற்றவராக நடிகை சாய் பல்லவி இருந்து வருகிறார். பெரும்பாலும் எல்லா நடிகைகளுக்கும் எதிர்மறையான விமர்சனங்களை கொடுக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

ஆனால் சாய் பல்லவிக்கு மட்டும் அப்படியான ரசிகர்களை அதிகமாக பார்க்க முடியாது. ஏனென்றால் மிகவும் சிம்பிளான ஒரு நடிகையாக சாய்பல்லவி இருந்து வருகிறார்.

பெரிதாக மேக்கப் போட்டுக் கொள்ள மாட்டார். மிகவும் மாடர்னான உடைகளை அணிய மாட்டார். பார்ப்பதற்கு நமது ஊர்களில் தெருக்களில் பார்க்கும் பெண்களைப் போல சாதாரணமாக தெரியக்கூடியவர் சாய்பல்லவி.

sai pallavi

ஜோதிகா சொன்ன விஷயம்:

இதனாலேயே ரசிகர்களுடன் ஒன்றி போன ஒரு நடிகையாக இவர் இருக்கிறார் சாய்பல்லவி தமிழில் பெரும்பாலும் நல்ல நல்ல கதை களங்களைதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அமரன் திரைப்படத்தில் இவர் நடித்திருக்கும் நடிப்பு மிக சிறப்பாக இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் இதனை பாராட்டி நடிகை ஜோதிகா தனி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் எவ்வளவு சிறப்பான நடிப்பை வெளியிட்டிருக்கிறீர்கள் அதுவும் கிளைமாக்ஸில் நீங்கள் அழுத அந்த காட்சி மிகவும் அருமையாக இருந்தது.

பத்து நிமிடம் என்னால் அந்த காட்சியை பார்த்துவிட்டு மூச்சு விட முடியவில்லை என்று ஜோதிகா கூறி இருக்கிறார். இதற்கு பதில் அளித்த சாய் பல்லவி மிகுந்த நன்றிகளை தெரிவித்திருக்கிறார்.