Tamil Cinema News
காட்டி நடித்தால்தான் பாலிவுட்டில் சான்ஸ்.. சாய் பல்லவிக்கு வந்த பிரச்சனை..!
தமிழ் தெலுங்கு அன்று இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. அதிலும் தமிழில் சமீபத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.
அதனை தொடர்ந்து எப்படியும் தமிழில் ஒரு ரவுண்டு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நடுவே ஹிந்தியில் ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.
பலரும் இதற்காக சாய்பல்லவியை விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் அமரன் திரைப்படம் ஹிந்தியில் கூட வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பதற்கு இப்பொழுது இந்தியிலும் வரவேற்புகள் அதிகரித்து இருக்கிறது.
இந்த படத்திற்கு பிறகு ஹிந்தியில் நிறைய திரைப்படங்களில் சாய்பல்லவிக்கு வாய்ப்புகள் வந்து வண்ணம் இருக்கிறது. தற்சமயம் அமீர்கானின் மகனுடன் இன்னொரு திரைப்படத்தில் இவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு பாலிவுட்டில் அழைக்கின்றனர் என்று கூறப்படுகிறது. சாய்பல்லவியை பொருத்தவரை அவர் தொடர்ச்சியாக நடிக்க கூடாது என்கிற நோக்கத்துடன் இருந்தவர் எனவே இதை எப்படி கையாள போகிறார் என்பது கேள்வியாக இருக்கிறது.