Tamil Cinema News
சல்மான்கான் உடன் இருந்த நட்புதான் காரணம்.. கொலை செய்யப்பட்ட பாபா சித்திக்.. ரவுடி கொடுத்த வாக்குமூலம்..!
பாலிவுட்டை பொருத்தவரை அங்கு எப்போதுமே ரவுடிகளின் ஆதிக்கம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. பாலிவுட்டில் சினிமா துவங்கிய காலகட்டம் முதலே அதில் ரவுடிகளின் ஆக்கிரமிப்பு என்பதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இங்கு உள்ள சினிமா போல இல்லாமல் அங்கு இந்த ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் நிறைய நடிகைகள் பாலிவுட்டில் அறிமுகமாகாமல் தென்னிந்தியா பக்கம் நடிப்பதற்கு வந்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் நடிகருடன் இருந்த நட்பின் காரணமாக பிரபல அரசியல் தலைவர் தற்சமயம் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். பாபா சித்திக் எனப்படும் அரசியல் பிரமுகர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தவர்.
சல்மான்கான் நண்பர்:
அவர் மூத்த அரசியல் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூலமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இது வட இந்தியாவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் இந்த கொலைக்கு லாரன்ஸ் என்னும் ரவுடியின் கும்பல் பொறுப்பேற்று இருக்கிறது. லாரன்ஸின் கும்பலுக்கும் நடிகர் சல்மான் கானுக்கும் இடையே ஏற்கனவே நிறைய நிறைய பிரச்சனைகள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாபா சித்திக் சல்மான்கான் உடன் நட்பில் இருந்ததால் தான் அவரை கொன்றோம் என்று இந்த குழு கூறி இருக்கிறது இது பாலிவுட் சினிமாவிலும் ஒரு பக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
