Tamil Cinema News
நடிகருக்கு போட்ட மிகப்பெரிய ஸ்கெட்ச்… பாகிஸ்தானில் இருந்து இறங்கும் ஆயுதங்கள்.. பெரிய ஆபத்து காத்திருக்கு?.
வெகு காலங்களாகவே பாலிவுட் சினிமாவிற்கும் ரவுடிசத்திற்கும் இடையே தொடர்பு இருந்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் மொத்த பாலிவுட் சினிமாவும் மும்பையில் இருக்கும் தாதாக்களின் கையில்தான் இருந்தது என்று ஒரு பேச்சு உண்டு.
அந்த அளவிற்கு சினிமாவில் அவர்களது புழக்கம் உண்டு. இந்த நிலையில் ஒரு பெரிய தாதாவுக்கும் சல்மான் கானுக்கும் இடையே வெகு நாட்களாகவே பிரச்சனைகள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் சல்மான்கானை தீர்த்து கட்டுவதற்கு அந்த ரவுடி பெரிய ஸ்கெட்ச் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்காக பலரை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார் ரவுடி லாரன்ஸ்.
கட்டம் கட்டும் ரவுடி:
தொடர்ந்து சல்மான் கானிடம் இவர் பிரச்சனை செய்து வருகிறார். சல்மான் கானுக்கும் இவருக்கும் இடையே வெகு நாட்களாகவே பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் இவரை தாக்குவதற்காக பல ஆட்களையும் நியமித்து இருக்கிறாராம் லாரன்ஸ்.
மேலும் சல்மான்கானை தீர்த்துக்கட்ட பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை இவர் இறக்குமதி செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் பலரையும் பல இடங்களில் வேலைக்கு அமர்த்திருக்கிறார்.
இது மட்டுமன்றி தொடர்ந்து 50 பேர் சல்மான் கானின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு இனி சல்மான் கானுக்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
