Actress
ஜிம் உடையில் கலக்கும் தனுஷ் பட நடிகை!..
மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா மேனன். கேரளாவை சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய சாதி பெயரை பின்னால் வைத்துக் கொண்டுதான் தமிழ் சினிமாவிற்கு வந்தார் சம்யுக்தா.
ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் யாருமே பின்னால் ஜாதி பெயரை வைத்துக் கொள்வதில்லை என்பதை அறிந்தவுடன் அந்த விஷயம் சம்யுக்தாவிற்கு பிடித்து போனது.

அதனை தொடர்ந்து அவரது பெயரை வெறும் சம்யுக்தா என்று மாற்றிக் கொண்டார். மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான பாப்கான் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் சம்யுக்தா. அதனை தொடர்ந்து மலையாளத்தில் வரவேற்பு பெற்று வந்த இவர் முதன் முதலாக தமிழில் களரி என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.
தமிழில் அறிமுகம்
ஆனால் அந்த திரைப்படம் இவருக்கு பெரிதாக வரவேற்பு பெற்று தரவில்லை ஆனால் தனுஷிற்கு ஜோடியாக இவர் நடித்த வாத்தி திரைப்படம் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என்று இப்பொழுது மூன்று மொழிகளிலும் வாய்ப்புகளை பெற்று வருகிறார் சம்யுக்தா.

இந்த திரைப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார் சம்யுக்தா. அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிடும் சம்யுக்தா உடற் பயிற்சி கூடத்திற்கு சென்று வெளியிட்ட புகைப்படங்கள் அதிக பிரபலமாக துவங்கியிருக்கின்றன. இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் சம்யுக்தா.
