எம்.ஜி.ஆரால் உங்க படத்தை பாக்குறதையே விட்டுட்டேன்… சத்யராஜின் முகத்திற்கு முன்பே சொன்ன காமெடி நடிகர்!.
Actor Sathyaraj : தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக வலம் வந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சத்யராஜ். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும்போது சத்யராஜ் வில்லனாகதான் அறிமுகமானார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருக்கு இருந்த வரவேற்பின் காரணமாக சத்யராஜ் கதாநாயகனாக நடிக்க துவங்கினார்.
கதாநாயகனாகவும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கதாநாயகனாக நடித்தப்போதும் சரி வில்லனாக நடித்தப்போதும் சரி மிகவும் சீரியஸான கதாபாத்திரமாகவே சத்யராஜ் நடிக்க மாட்டார். நக்கல் நய்யாண்டி நிறைந்த காமெடி கதாபாத்திரமாக இருப்பார். அதற்க்குள்ளேயே ஒரு வில்லத்தனம் ஒரு ஹீரோத்தனம் இருக்கும்.

இந்த வகையான நடிப்பிற்கு மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. போதா குறைக்கு கவுண்டமணியும் அவருடன் சேர்ந்ததால் இருவரும் சிறப்பான காம்போவாக இருந்தனர்.
சத்யராஜ் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெரும் விசிறி என்பது பலரும் அறிந்த விஷயமே. எனவே அவரது திரைப்படங்களில் அவர் நடிப்பில் அடிக்கடி எம்.ஜி.ஆர் எட்டிப்பார்ப்பதை பார்க்க முடியும். இப்படியான நிலையில்தான் ஒரு நாள் அவரை சந்தித்தார் காமெடி நடிகரும், உதவி இயக்குனருமான சௌந்தர்.

அவர் சத்யராஜிடம் பேசும்போது உங்களை வில்லனாக நடித்தப்போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஹீரோவாக நடித்தப்போது கூட ஓ.கே என்றுதான் இருந்தது. ஆனால் நீங்கள் எம்.ஜி.ஆர் போல் செய்ய துவங்கிய போது நான் உங்கள் படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன் சார். உங்கள் ஸ்டைலில் நடியுங்களேன் சார் என கூறியுள்ளார்.
அதை கேட்டதும் சத்யராஜிற்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என புரிந்தது. உடனே சத்யராஜ் சௌந்தரிடம் என்னை அறியாமலேயே அப்படி நடிக்க வந்துவிடுகிறது. இந்த படப்பிடிப்பில் அப்படி நான் செய்தால் என்னிடம் சொல்லி விடுங்கள் என கூறியுள்ளார் சத்யராஜ். இந்த விஷயத்தை சௌந்தரே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.