Connect with us

அஜித்திற்கு தெரிய வேண்டாம்.. ரகசியமாவே இருக்கட்டும்.. நைட் 1 மணிக்கு இயக்குனரை தொல்லை செய்த ஷாலினி!..

Cinema History

அஜித்திற்கு தெரிய வேண்டாம்.. ரகசியமாவே இருக்கட்டும்.. நைட் 1 மணிக்கு இயக்குனரை தொல்லை செய்த ஷாலினி!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் காதலித்து ஜோடியான நடிகர் நடிகையர்கள் குறைவானவர்களே. அந்த வரிசையில் அஜித்தும் ஷாலினியும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த அமர்களம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். இந்த திரைப்படத்தில்தான் இவர்களுக்குள் காதல் உருவானது.

பிரபல இயக்குனரான சரண் இந்த படத்தை இயக்கினார். இந்த படம் அஜித்திற்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது என கூறலாம். பொதுவாக அந்த சமயத்தில் இயக்குனர் சரண் இயக்குகிற திரைப்படங்கள் யாவும் தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுக்க கூடியவை.

அந்த வகையில் அமர்களம் திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுத்தது. அமர்களம் படப்பிடிப்பு நடந்தபோது அஜித்திற்கும், ஷாலினிக்குமான காதலானது டெவலப் ஆனது. எனவே இருவரும் அடிக்கடி வெளியில் சென்று பேசிக்கொள்வது என நாட்கள் சென்றன.

இந்த நிலையில் அஜித்தின் பிறந்தநாள் வந்தது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என நினைத்தார் ஷாலினி. இதற்காக இயக்குனர் சரணிடம் உதவி கேட்டார். அஜித்திற்கு பிடித்த அனைத்து பொருட்களையும் வாங்கினார் ஷாலினி.

பிறகு அவற்றை சரணிடம் கொடுத்து இரவு 1 மணிக்கு இந்த பொருட்களை எல்லாம் அஜித் அறையின் வாசலில் வைத்துவிட்டு வர வேண்டும். இந்த விஷயம் அஜித்திற்கு தெரிய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். சரணும் அதற்கு ஒப்புக்கொண்டு இரவு 1 மணி அளவில் அஜித் வீட்டின் வாசலில் பொருட்களை வைத்து வந்துள்ளார்.

இந்த நினைவுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்துக்கொண்டுள்ளார் சரண்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top