News
இசை வெளியீட்டுக்கு கண்டிப்பா வறேன்! – விஜய்க்கு பதிலளித்த ஷாருக்!
தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படங்களாக துணிவு மற்றும் வாரிசு உள்ளது.

வெகு காலத்திற்கு பிறகு தல மற்றும் தளபதி இருவரும் தீயாய் போட்டி போட்டு தங்களது படங்களுக்கான அப்டேட்டை வரிசையாக வெளியிட்டு வருகின்றனர்.
துணிவு படத்தில் இருந்து 2 சிங்கிள் பாடல்களும், வாரிசு படத்தில் 3 சிங்கிள் பாடல்களும் வெளிவந்துள்ளன. அடுத்து படத்தின் ட்ரைலர் எப்போது வரும் என அனைவரும் ஆவலோடு காத்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கிருஸ்மஸ்க்கு முதல் நாளான 24 ஆம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை நிகழ்த்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ளுமாறு பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நடிகர் ஷாருக்கானும் இந்த விழாவிற்கு வருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படமும் கூட அடுத்து வெளியாக இருப்பதால் அந்த படத்திற்கும் இது ஒரு ப்ரோமோஷனாக இருக்கும் என்பதால் ஷாருக் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
