மார்வெலின் அடுத்த அதிரடி வந்தாச்சு..! – She Hulk தமிழ் ட்ரெய்லர்!

She Hulk

ஹாலிவுட்டில் சூப்பர்ஹீரோ படங்கள் எடுப்பதில் மிகப்பெரும் ஜாம்பவனாக விளங்கி வரும் நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ்.

She Hulk

சமீபத்தில் மார்வெல் வெளியிட்ட Spiderman: No Way Home, Doctor Strange and the Multiverse of Madness ஆகிய படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி பெரும் ஹிட் அடித்தன.

சமீப காலமாக திரைப்படம் மட்டுமல்லாமல் ஓடிடியில் மினி சிரிஸ்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது மார்வெல் ஸ்டுடியோஸ். அந்த வகையில் சமீபத்தில் வெளியான Loki, Moon Knight தொடர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து அடுத்ததாக புதிய சூப்பர்ஹீரோவான She Hulk ன் வெப்சிரிஸை மார்வெல் வெளியிடுகிறது. நம்ம 90ஸ் பேமஸ் சூப்பர்ஹீரோ ப்ரூஸ்பேனர் என்னும் ஹல்க்கின் சகோதரிதான் இந்த ஷீ ஹல்க். இதன் தமிழ் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மினி சிரிஸ் ஆகஸ்டு 17ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh