Hollywood Cinema news
வெளியானது மிஸ் மார்வெல் – மார்வெல்லின் முதல் இந்திய சூப்பர் ஹீரோ
ஹாலிவுட்டில் தொடர்ந்து சூப்பர் ஹீரோ படங்களையும், தொடர்களையும் வெளியிட்டு வரும் நிறுவனமாக மார்வெல் உள்ளது. ஹாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த படங்களில் முக்கியமான படங்களாக எப்போதும் மார்வெல்லின் திரைப்படங்கள் இருக்கும்.

இதுவரை மார்வெல் படங்களில் வந்த கதாபாத்திரங்கள் அதிகப்பட்சம் அமெரிக்கர்களாகவே இருக்கும், அயர்ன் மேன், ஹல்க், ஸ்பைடர் மேன் என பலரும் அமெரிக்க ஹீரோக்களாகவே இருந்துள்ளனர்.
ஆனால் இந்தியாவிலும் மார்வலுக்கு கணிசமான ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே மார்வெல் நிறுவனம் இந்தியாவிற்கான ஒரு சூப்பர் ஹீரோவாக மிஸ் மார்வெல் தொடரை எடுத்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண் சூப்பர் ஹீரோவாக மாறுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கு இந்தியாவில் அதிக எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் அதன் முதல் எபிசோட் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நாளை இந்த தொடர் குறித்த டிவீவ்களை எதிர்ப்பார்க்கலாம்.
