இந்தியாவிலேயே அந்த விஷயத்தில் இவ்வளவு அறிவா இருக்கிறது தமிழ்நாட்டுலதான்.. ஆடிப்போன நடிகை ஷில்பா மஞ்சுநாத்!..

கன்னட சினிமாவில் மங்காரு மாலே 2 என்கிற திரைப்படம் மூலமாக கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். தமிழ் சினிமாவில் எமன் என்கிற திரைப்படத்தில் அறிமுகமானாலும் விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படம்தான் இவருக்கு வரவேற்பை ஏற்படுத்தி தரும் திரைப்படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார் ஷில்பா மஞ்சுநாத். ஆனால் அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் எல்லாம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து அவருக்கு வாய்ப்புகளும் குறைய துவங்கின.

Social Media Bar

இவர் பெங்களூரை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் தலைவரான பெரியாரை பின்பற்றுபவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அவர் கூறும்போது இந்தியாவிலேயே தங்களது பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடாதவர்கள் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே.

தமிழ்நாட்டு மக்களை பார்த்துதான் எனது பெயரையே ஷில்பா மஞ்சுநாத் என்று வைத்திருக்கிறேன். உண்மையில் சாதி என்பது தேவையில்லாத ஒன்று. நான் எனது சாதியை வெளியில் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்ததற்கு தமிழ்நாட்டு மக்கள்தான் காரணம்.

ஆனால் இத்தனை கோடி தமிழ்நாட்டு மக்களும் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி வேண்டாம் என யோசிக்க வைத்தவர் பெரியார். அந்த விஷயத்தில் தமிழ்நாட்டை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.