சிவாஜியால் மனம் வருந்திய நாகேஷ்… அவரு அப்படி செய்திருக்கக் கூடாது!.
Sivaji Ganeshan and Nagesh : பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ், சிவாஜி கணேசனுடன் பல படங்கள் இணைந்து நடித்திருந்தாலும் ஏ.பி.நாகராஜ் இயக்கத்தில் 1965 இல் வெளிவந்த படம் “திருவிளையாடல்”.
இந்த படத்தில் நாகேஷ் ஏழை தருமி வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இன்றும் தருமிக்கும், இறைவன் சிவபெருமானுக்கு இடையே அந்த படத்தில் நடந்த வாதத்தை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த சமயத்தில் நாகேஷ் படவாய்ப்புகள் அதிகம் வந்தவண்ணம் இருந்தது. ஏ.பி.நாகராஜின் அழைப்பால் தான் “திருவிளையாடல்” படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.

அடுத்தடுத்து படங்கள் இருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்த வேடத்தை நடித்து முடிக்க வேண்டும் என்று நினைத்தார். அரைமணி நேரத்தில் மேக்கப் எல்லாம் முடித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டார் ஆனால் சிவபெருமானாக வரும் சிவாஜிக்கு மேக்கப் போட நேரம் எடுத்துக்கொண்டது.
உடனே சிவாஜியுடன் இல்லாத வசனங்களை படமாக்கலாம் என்று இயக்குனரிடம் கூற அதையும் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பை தொடங்கினார் இயக்குனர். அப்போதே சிவாஜியும் மேக்கப் முடித்து உள்ளே நுழைந்தார். இருவருக்குமான வாதம் படமாக்கப்பட்டு டப்பிங் மற்றும் முதல் காட்சி திரையிடப்பட்டது.
முதல் காட்சியை சிவாஜி பார்த்துவிட்டு நாகேஷை நேரடியாக அழைத்து பாராட்டாமல் இயக்குனரிடம் நாகேஷ் நன்றாக நடித்திருக்கிறார் அவருடைய காட்சிகள் அத்தனையும் படத்தில் இடம்பெற வேண்டும் என்று பாராட்டிவிட்டு சென்றுள்ளார். இதனை அறிந்து கொண்ட நாகேஷ், சிவாஜி தன்னை நேரில் அழைத்து பாராட்டாதது பற்றி மனம் வருந்தியதாக அவரது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார்.
மேலும் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு அழைப்பு கொடுக்கவில்லை என்பதால் மனம் வருந்தியதாகவும் நகேஷ் குறிப்பிட்டிருந்தார். ஏன் அழைக்கவில்லை என்பதற்கான காரணம் சில நாட்களுக்குப் பின் தான் தெரியவந்தது.
அந்த வெற்றிவிழாவில் சிவாஜிக்கு வைரவாள், நடிகைக்கு வைர மோதிரம் பரிசளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள் இதை அறிந்த நாகேஷ் இந்த நிகழ்ச்சி மேலும் சிறப்படைய தருமி கதாபத்திரத்தில் நடித்த எனக்கு ஒரு பொற்காசு பை கொடுங்கள் அதில் பொற்காசுகளுக்குப் பதில் கற்களை கூட தாருங்கள் போதும் என்று அசோசியேட் டிரைக்டரிடம் விளையாட்டாகக் கூறியிருந்தார் அனால் அதை அவர் இயக்குனரிடன் திரித்து நாகேஷுக்கு பொற்காசு பை கொடுக்க வேண்டுமாம் என்று கூறியதால் தான் அவரை வெற்றி விழாவிற்கு அழைக்கவில்லை என்பதை புரிந்து கொண்டார் நாகேஷ்.