எஸ்.கேவால் கோடிகளை இழந்தாரா வெங்கட் பிரபு.. சிக்கலில் சிக்கிய இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இறுதியாக நடிகர் விஜய்யை வைத்து மாஸ் ஹிட் படம் ஒன்றை கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு.

இந்த நிலையில் அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இவர் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. தற்சமயம் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அதற்கு பிறகு வெங்கட் பிரபுவின் திரைப்படத்தை தொடரலாம் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நிறைய தயாரிப்பாளர்கள் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இருந்தனர். அப்படியெல்லாம் இருந்தும் கூட சிவகார்த்திகேயனுக்காக அந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்தார் வெங்கட் பிரபு.

இந்த நிலையில் அடுத்து வெங்கட் பிரபுவிற்கு வாய்ப்பு கொடுக்காமல் சுதா கொங்காரா திரைப்படத்தில் கமிட் ஆகிவிட்டார் எஸ்.கே. இதனையடுத்து இது வெங்கட் பிரபுவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. சுதா கொங்கரா படத்தை முடித்தவுடன் மீண்டும் டான் பட இயக்குனரான சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் படம் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.

அந்த படத்திற்கு பிறகுதான் அவர் வெங்கட் பிரபுவிற்கு படம் நடிக்க முடியும் என கூறிவிட்டாராம். இந்த நிலையில் எஸ்.கேவை நம்பி தனது கோடிகளில் வந்த அட்வான்ஸ் தொகையை கூட மறுத்துவிட்டாராம் வெங்கட் பிரபு.