Connect with us

அஜித்தோடு போட்டி போடும் சிவகார்த்திகேயன்.. துப்பாக்கியை வாங்கினதும் விஜய்னு நினைச்சுட்டாரு போல..!

ajith sivakarthikeyan 2

Tamil Cinema News

அஜித்தோடு போட்டி போடும் சிவகார்த்திகேயன்.. துப்பாக்கியை வாங்கினதும் விஜய்னு நினைச்சுட்டாரு போல..!

Sivakarthikeyan continues to act in successful films in Tamil cinema. His recently released film Amaran gave good success. In this situation, Sivakarthikeyan is going to compete with Ajith next

நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதாக அறிவித்தது முதலே அவருடைய இடத்தை யார் பிடிக்கப் போகிறார் என்பது ஒரு கேள்வியாக இருந்து வருகிறது.

ஏனெனில் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் பெரும் நடிகராக இருந்து வருகிறார். அப்படிப்பட்ட நடிகர் தன்னுடைய இடத்தை விட்டுவிட்டு அரசியல் செல்கிறார் எண்ணும்பொழுது அந்த இடம் பெற்றிடமாகும்.

இப்பொழுது இருக்கும் எந்த நடிகர்கள் அந்த இடத்தை பிடிக்க போகிறார்கள் என்பதே கேள்வியாக இருந்து வருகிறது. பெரும்பான்மையாக நடிகர் சிவகார்த்திகேயன்தான் அந்த இடத்தை தொடுவார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

சிவகார்த்திகேயனின் முடிவு:

அதற்கு தகுந்தார் போல கோட் திரைப்படத்திலும் ஒரு காட்சியில் விஜய் சிவகார்த்திகேயனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு செல்வது போல காட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் அமரன் திரைப்படமும் விஜயின் திரைப்படங்களைப் போலவே பெரிய வசூலை கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் மே மாதம் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இதே நாளில் அஜித்துடன் போட்டி போட்டு சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படமும் வெளிவர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அமரன் திரைப்படம் கொடுத்த வெற்றியின் காரணமாக சிவகார்த்திகேயன் இப்படியான ஒரு முடிவை எடுத்திருக்கலாம் ஏனெனில் துணிவு திரைப்படத்தின் மொத்த வசூலை விட அமரன் திரைப்படத்தின் 10 நாள் வசூல் அதிகமாகும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை அப்படி அஜித்துடன் போட்டி போட்டு சிவகார்த்திகேயன் அதிகமான வசூல் கொடுத்து விட்டால் நிச்சயமாக அவர்களுக்கு அடுத்தடுத்த படங்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

shruthika
biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
To Top