Connect with us

இதுவரைக்கும் வந்த படத்துலையே இது வேற ரகமா இருக்கும் போலயே… Mission Impossible – The Final Reckoning வெளியான ட்ரைலர்.. இதை கவனிச்சீங்களா?

Mission Impossible – The Final Reckoning

Hollywood Cinema news

இதுவரைக்கும் வந்த படத்துலையே இது வேற ரகமா இருக்கும் போலயே… Mission Impossible – The Final Reckoning வெளியான ட்ரைலர்.. இதை கவனிச்சீங்களா?

Social Media Bar

Mission Impossible is a movie that has been very popular among Hollywood fans and Tamil cinema fans for many years. The trailer of Mission Impossible – The Final Reckoning, the last film of this film, was released recently

ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஹாலிவுட்டில் வரும் நிறைய திரைப்படங்களில் அதிக பிரேமம் உண்டு. சனிக்கிழமைகளில் விஜய் டிவியில் ஜாக்கிச்சான் திரைப்படங்களை பார்த்து ஹாலிவுட் படங்கள் மீது ஆசை கொண்ட பலர் இப்போதும் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

அந்த வகையில் பலருக்கும் பிடித்த நடிகராக நடிகர் டாம் குருஸ் இருந்து வருகிறார். டாம் குருஸ் நடித்த திரைப்படங்களில் பலரது மத்தியிலும் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக மிஷன் இம்பாசிபல் திரைப்படம் இருந்து வருகிறது.

மிஷன் இம்பாசிபல் திரைப்படம் இதுவரை 7 பாகங்கள் வரை வந்துள்ளது. அடுத்து வரவிருக்கும் எட்டாவது பாகம்தான் படத்தின் இறுதி பாகம் என கூறப்படுகிறது. மிஷன் இம்பாசிபல் திரைப்படத்தை  பொறுத்தவரை இம்பாசிபல் மிஷன் ஃபோர்ஸ் என்கிற அமைப்பு அமெரிக்காவிற்காக செயல்படும் ரகசிய பாதுகாப்பு அமைப்பாகும்.

Mission Impossible – The Final Reckoning:

அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அரசால் செய்ய முடியாத விஷயங்களை செய்வதுதான் இவர்களது வேலை. இவர்கள் எடுக்கும் மிஷன்களை அடிப்படையாக கொண்டு படத்தின் ஒவ்வொரு கதையும் இருக்கும். இந்த நிலையில் படத்தின் ஏழாம் பாகத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவான செயற்கை நுண்ணறிவை வில்லனாக சித்தரித்தனர்.

உலகில் எவரை பார்த்தும் பயப்படாத ஏ.ஐ டாம் குருஸை பார்த்து பயப்படுகிறது. ஏனெனில் ஏ.ஐக்கே டஃப் கொடுக்கும் மாஸ் ஏஜெண்டாக டாம் குருஸ் இருக்கிறார்.

இந்த நிலையில் ஏழாம் பாகம் பாதியிலேயே முடிந்த நிலையில் 8 ஆம் பாகத்தோடு மிஷன் இம்பாசிபல் திரைப்படம் முடிவடைகிறது என கூறப்பட்டுள்ளது. பலரது எதிர்பார்ப்பிற்கு நடுவே அதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மே 2025 இல் படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல இந்த படத்திலும் டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார் டாம் குருஸ். மற்ற பாகங்களை விட இந்த படம் இன்னமுமே சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top