Connect with us

உடல் ரீதியா என்னை துன்புறுத்தினான்.. நடிகை சோனாவை கண்ணீர் சிந்த வைத்த வாலிபன்.. அடக்கொடுமையே!.

Actress sona

News

உடல் ரீதியா என்னை துன்புறுத்தினான்.. நடிகை சோனாவை கண்ணீர் சிந்த வைத்த வாலிபன்.. அடக்கொடுமையே!.

Social Media Bar

Sona Heiden: சினிமாவில் குறைந்த அளவு படங்கள் நடித்திருந்தாலும், ஒரு சில நடிகைகள் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து இருப்பார்கள். ஒரு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் குறைந்த நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், அவர்களின் நடிப்பு ரசிகர்களின் மனதில் நீங்காமல் இருக்கும்.

இதனால் அந்த நடிகர், நடிகைகளை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த வகையில் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கும் நடிகை சோனா ஹைடன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முன்னாள் காதலனை பற்றி பரபரப்பான ஒரு செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

குசேலன் சோனா ஹைடன்

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த குசேலன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். அதில் காமெடியனாக வரும் வடிவேலுக்கு மனைவியாக சோனா ஹைடன் நடித்திருந்தார்.

மேலும் சென்னையில் இவர் “யூனிக்” என்ற ஒரு துணிக்கடையை வைத்திருக்கிறார். இவரின் துணிக்கடையை ஷில்பா ஷெட்டி திறந்து வைத்தார்.

sona-heiden

இவர் தமிழ் சினிமாவில் பல குத்தாட்ட பாடல்களுக்கு நடனமாடி புகழ்பெற்றிருக்கிறார். மேலும் கடந்த 2002இல் மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை இவர் வெற்றி இருக்கிறார். மேலும் இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.

சோனா ஹைடன் முன்னாள் காதலர்

சோனா கைடன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய முன்னாள் காதலனை பற்றி பேசி இருக்கிறார். அவர் நான் என்னுடைய முன்னாள் காதலனை மிகவும் உண்மையாக காதலித்தேன். அவனும் என்னை உண்மையாக தான் காதலித்தான்.

ஆனால் அவன் என்னை மிகவும் உடல் ரீதியாக தொல்லைகள் செய்து வந்தான். அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

sona-heiden

மேலும் அவன் என்னிடம் வன்முறையாக தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தான். அவனுடன் இருக்கும் பொழுது நான் எப்பொழுதும் அழுது கொண்டே இருப்பேன். அதனால் நான் அவனிடமிருந்து விலகி வந்து விட்டேன்.

நான் அவனை உண்மையாக காதலித்தேன். திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் வாழ வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவன் இவ்வாறு செய்ததால் எனக்கு காதலில் இருந்த நம்பிக்கையே போய்விட்டது.

இவ்வாறு வருத்தமாக தன்னுடைய காதலனை பற்றி சோனா ஹைடன் தெரிவித்துள்ளார்.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top