News
இந்தியாவில் நடந்த 30,000 கோடி ஊழல்!.. தமிழில் வெளிவந்த புது சீரிஸ்!.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வெப் சீரிஸ்களுக்கு பெரிய வரவேற்பு வந்துள்ளது. தமிழில் வெப் சீரிஸ்கள் வருவதும் தற்சமயம் அதிகரித்து வருகிறது. இதனால் ஓ.டி.டி நிறுவனங்கள் வெப் சீரிஸ் எடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
பிரபலமான ஓ.டி.டி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் கூட அவர்களிடையே பிரபலமாக உள்ள மனி ஹைஸ்ட், ஸ்குவிட் கேம் போன்ற சீரிஸ்களை தமிழ் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சோனி லிவ் நிறுவனமும் இந்தியாவில் சில சுவாரஸ்யமான வெப் சீரிஸ்களை செய்து வருகிறது. ஏற்கனவே இதில் ஸ்கேம் 1992 என்கிற சீரிஸ் வந்தது. இந்தியாவில் ஹர்ஷத் மேத்தா என்கிற நபர் நிகழ்த்திய பெரும் மோசடியை மையமாக வைத்து இந்த சீரிஸ் வந்தது.
தற்சமயம் ஸ்கேம் 2003 என்கிற இன்னொரு வெப் சீரிஸை வெளியிட்டுள்ளது சோனி லிவ். 1990 களில் இந்தியாவில் பெரும் மோசடி செய்து வந்தவர் அப்துல் கரிம் தெல்கி. ஸ்டாம்ப் பேப்பர் என கூறப்படும் பத்திரதாள்களை அவரே தயாரித்து விற்பனை செய்துள்ளார் அப்துல் கரிம் தெல்கி.
இதில் பூனே ஸ்டாம் பேப்பர் ப்ரிண்டிங் ப்ரஸ்ஸின் மேலாளரே இவருக்கு உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 30,000 கோடி ஊழலை நிகழ்த்தியுள்ளார் அப்துல் கரிம் தெல்கி. இந்த ஊழலை மையமாக வைத்து இந்த ஸ்கேம் 2003 சீரிஸ் வந்துள்ளது.
தமிழ் டப்பிங்கில் வந்துள்ள இந்த சீரிஸ் தற்சமயம் வரவேற்பை பெற்று வருகிறது.
