Connect with us

சம்பளம் மட்டும் ஒரு கோடிக்கிட்ட கொடுத்திருக்கோம்!.. லியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த திரைப்பட தொழிலாளர் சங்கம்!.

vijay leo

News

சம்பளம் மட்டும் ஒரு கோடிக்கிட்ட கொடுத்திருக்கோம்!.. லியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த திரைப்பட தொழிலாளர் சங்கம்!.

Social Media Bar

மக்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் உள்ளது லியோ திரைப்படத்தில் நான் ரெடி தான் வரவா என்கிற பாடலின் படப்பிடிப்பிற்காக 1400 பேர் வரவழைக்கப்பட்டனர்.

ஏனெனில் அந்த பாடலில் பெரிய கூட்டம் ஒன்று நடனமாட வேண்டி இருந்தது. அதற்காக இவர்களை வேலைக்கு அமர்த்தி நடனம் ஆட வைத்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் தற்சமயம் சம்பளம் வந்து சேரவில்லை என்று கூறி அது தொடர்பாக வழக்கு போட போவதாக கூறி இருந்தனர்.

இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பில் இருந்து பதில் கொடுத்துள்ளனர் அதில் கூறியுள்ளதாவது இந்த லியோ திரைப்படத்தில் 1400 உறுப்பினர்கள் அல்லாதவர்கள் சென்னை பனையூரில் உள்ள ஆதி ஸ்ரீராம் ஸ்டுடியோவில் கடந்த ஜூன் மாதம் 6 நாட்கள் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது.

அதன்படி அவர்களுக்கு ஒரு உறுப்பினருக்கு நாள் ஒன்றுக்கு 1750 ரூபாய் விதம் 6 நாட்களுக்கு 10,500 வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக 94,60,500 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்கு படுத்துவதற்காக வந்த நடன கலைஞர்களுக்கும் தனியாக வழங்கப்பட்டுள்ளது. என விளக்கம் அளித்துள்ளார் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவரான ஆர் கே செல்வமணி.

To Top