Tamil Cinema News
என் பையனை ஏ.ஆர் முருகதாஸ் கிட்ட அனுப்ப இதுதான் காரணம்.. உண்மையை கூறிய இயக்குனர் ஷங்கர்.!
இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான ஒரு இயக்குனராக பார்க்கப்படுகிறார். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து ஹிட் கொடுக்கும் இயக்குனராக ஷங்கர் இருந்து வருகிறார். ஆனால் இப்போதெல்லாம் ஷங்கரின் படங்கள் அவ்வளவாக வெற்றி பெறுவதில்லை.
இருந்தாலும் அவர் வாய்ப்புகளை பெற்று படங்களை இயக்கி கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தும் கூட இயக்குனராகவே ஆசைப்படுகிறார். எனவே அவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்துள்ளார்.
இதுக்குறித்து இயக்குனர் ஷங்கரிடம் கேட்டப்போது, அவர் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். எனக்கு என் மகன் என்னுடன் சேர்ந்து பணிப்புரிய வேண்டும் என்றுதான் ஆசை. அவனுக்கும் நல்ல திறமை இருக்கிறது. ஆனால் அவனும் நானும் ஒரு படத்தில் பணிப்புரிந்தால் அது அப்பா மகன் உறவாகதான் இருக்கும்.
அங்கு அவன் உதவி இயக்குனராக இருக்க மாட்டான். அவனை இயக்குனரின் மகனாகதான் பார்ப்பார்கள். அது அவனது திறமையை வளர்த்துக்கொள்ள தடையாக இருக்கும் என நினைத்தேன். எனவே அவனை நான் ஏ.ஆர் முருகதாஸிடம் அனுப்பி வைத்தேன்.
அதற்கு பிறகு கேம் சேஞ்சர் திரைப்படத்தில் என்னுடன் பணிப்புரிந்தான். நிறைய கற்றுள்ளான். அவன் லிமிட் தெரிந்து அந்த இடத்திலேயே இருந்து ஒரு உதவி இயக்குனராக படத்தில் பணிப்புரிந்தான். என்று கூறியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
