Connect with us

இந்த மியூசிக்குக்கு பாட்டு எழுத முடியாது! – வாலிக்கு டஃப் கொடுத்த இளையராஜா!

Cinema History

இந்த மியூசிக்குக்கு பாட்டு எழுத முடியாது! – வாலிக்கு டஃப் கொடுத்த இளையராஜா!

Social Media Bar

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களின் குரு என அழைக்கப்படுபவர் இளையராஜா 1980 களில் இருந்து இப்போது வரை உள்ள பல முக்கியமான பாடல் ஆசிரியர்கள், கவிஞர்களுடன் இளையராஜா பணிப்புரிந்துள்ளார். அதில் முக்கியமானவர்கள் வாலி மற்றும் வைரமுத்து.

கமல் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சத்யா. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கவிஞர் வாலி அதற்கான பாடல் வரிகளை எழுதி இருந்தார். அதில் வலையோசை கல கல கலவென என்கிற பாடல் உருவான கதையை இளையராஜா ஒரு பேட்டியில் பகிர்ந்துக்கொள்கிறார்.

முதலில் வலையோசை பாடலுக்கான இசையை இளையராஜா ஏற்கனவே இசையமைத்துவிட்டார். இந்த நிலையில் வாலியை அழைத்து பாடலுக்கு வரி எழுத சொல்லி இருக்கிறார். இசையை கேட்ட வாலி என்னய்யா இது தன தனனானு இசை வருது. இதை வச்சிக்கிட்டு என்னய்யா பாட்டு போடுறது என எரிச்சலடைந்துள்ளார் வாலி.

பிறகு வெகு நேரம் யோசித்துவிட்டு தமிழில் ரெட்டை கிளவி என்கிற இலக்கண முறை உள்ளது. அந்த முறையில் ஒரு இசையை போட்டுவிடலாம். வலையோசை கல கல கலவென என்று பாடலை துவங்கலாம் என கூறி பாடல் வரிகளை எழுதியுள்ளார். படம் வெளியான பிறகு அந்த பாடல்தான் நல்ல ஹிட் கொடுத்தது.

To Top