Hollywood Cinema news
சூப்பர்மேனுக்கு வில்லனாக சூப்பர்மேன்.. புது கதை அம்சத்தில் வந்த சூப்பர்மேன் திரைப்படம்… விமர்சனம்..!
அமெரிக்காவில் மிகப் பழமையான ஒரு சூப்பர் ஹீரோ கதை என்றால் அது சூப்பர் மேன் கதைகள்தான். டிசி என்கிற காமிக்ஸ் நிறுவனம் பல வருடங்களுக்கு முன்பே சூப்பர் மேன் என்கிற ஒரு கதாநாயகனை அறிமுகப்படுத்தியது.
அதனை அடிப்படையாகக் கொண்டுதான் ஸ்பைடர் மேனில் துவங்கி இந்தியாவில் எடுக்கப்பட்ட சக்திமான் திரைக்கதை வரைக்கும் அமைந்திருந்தது இந்த நிலையில் சூப்பர் மேன் கதை ஒவ்வொரு முறையும் திரைப்படம் ஆக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
ஏற்கனவே மூன்று நான்கு முறை திரும்பத் திரும்ப சூப்பர் மேன் கதை படமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பொழுது பிரபல இயக்குனரான ஜேம்ஸ் கன் இயக்கத்தில் மீண்டும் சூப்பர் மேன் கதை படமாக்கப்பட்டு திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கிறது.
எல்லா கதைகளிலுமே லெக்ஸ் லூதர் என்கிற வில்லன்தான் சூப்பர் மேனுக்கு வில்லனாக வருவார் இவர் ஒரு கார்ப்பரேட் முதலாளியாக இருப்பார். இந்த படத்திலும் அந்த கதாபாத்திரம்தான் வில்லனாக வருகிறது. ஆனால் கதை அம்சத்தில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
படத்தின் கதைப்படி அல்ட்ரா மேன் என்கிற ஒரு புது கதாபாத்திரத்தை உருவாக்குகிறார் லெக்ஸ். அரசாங்கத்திடம் பேசி சூப்பர் மேனுங்கும் பதிலாக இந்த மனிதர் நமக்கு பல உதவிகளை செய்ய முடியும் என்று கூறுகிறார் லெக்ஸ் லூதர்.
சூப்பர் மேனனுக்கு இணையான சக்தியை கொண்டு இருக்கும் அல்ட்ரா மேனுகும் சூப்பர் மேனுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. அல்ட்ராமேன் அதிக சக்திகளை கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த பிரச்சனைகளில் இருந்து சூப்பர் மேன் எப்படி வெளிவர போகிறார் என்பதாக தான் இந்த கதைகளம் அமைந்திருக்கிறது.
வழக்கமாக சூப்பர்மேன் படங்களில் சூப்பர் மேனை யாராலும் அடிக்க முடியாது என்பதாக கதை இருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தில் சூப்பர் மேன் அடி வாங்கி கொண்டிருப்பதாக இருக்கிறது. வழக்கமான சூப்பர் மேன் திரைப்படங்களில் இருந்து இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.
