Tag Archives: ஆடுஜீவிதம்

பிரபாஸ்க்கிட்ட நான் எதுவும் கேட்க மாட்டேன்.. என் வாழ்க்கைல கத்துக்கிட்டது அது!.. ஓப்பனாக கூறிய ப்ரித்திவிராஜ்!.

2002 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ப்ரித்திவிராஜ். பிறகு 2005 ஆம் ஆண்டுதான் தமிழ் சினிமாவில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். தமிழை விடவும் இவர் மலையாளத்தில்தான் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் குறைவான அளவில் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கூட நல்ல வரவேற்பு உண்டு. மலையாளத்தில் சில படங்களை இயக்கி தயாரித்தும் இருக்கிறார் ப்ரித்திவிராஜ்.

தமிழில் அவர் நடித்த திரைப்படங்களில் மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை போன்ற படங்கள் பிரபலமானவை, தற்சமயம் கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் ப்ரித்திவி ராஜ்.

prithiviraj

பல வருடங்களாக அவர் நடித்து வந்த ஆடுஜீவிதம் திரைப்படம் தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் இதுவரை 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்பு ப்ரித்திவிராஜ் பல யூ ட்யூப் சேனல்களில் இதற்காக ப்ரோமோஷன் செய்து வந்தார்.

அந்த சமயத்தில் ஒரு பேட்டியில் ப்ரித்திவிராஜுடம் பேசும்போது படத்தின் ப்ரோமோஷனுக்கு உங்கள் நணபர் பிரபாஸை ஏன் அழைத்து வரவில்லை என கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த ப்ரித்திவிராஜ் என்னிடம் இல்லை என கூறாத நண்பர்களிடம் நான் எதையும் கேட்க மாட்டேன்.

பிரபாஸிடம் நான் எதை கேட்டாலும் அவர் இல்லை என கூறமாட்டார். அதனால் அவரிடம் நான் எதையும் கேட்பதில்லை. இது என் வாழ்க்கையில் ஒரு விதிமுறையாக பின்பற்றும் விஷயமாகும் என கூறியுள்ளார் ப்ரித்திவிராஜ்.

5 நாளில் ஆடுஜீவிதம் வசூல் நிலவரம்!.. 6 வருட உழைப்புக்கு வெற்றி கிடைத்ததா..

ப்ரித்திவிராஜ் நடிப்பில் தற்சமயம மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஆடுஜீவிதம். ப்ரித்திவிராஜ் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலுமே சற்று பிரபலமான நடிகராவார்.

தமிழை விடவும் மலையாளத்தில் இவர் அதிக படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் உண்மை கதையை தழுவி மலையாளத்தில் வந்த ஆடுஜீவிதம் என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு இவர் நடித்த திரைப்படம்தான் ஆடுஜீவிதம்.

கிட்டத்தட்ட 6 வருடங்களாக இந்த கதை படமாக்கப்பட்டு வருகிறது. உலகில் உள்ள பல பாலைவனங்களுக்கு சென்று கஷ்டப்பட்டு படப்பிடிப்பை நடந்தியுள்ளனர். கேரளாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு சென்று அங்கு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலையில் சிக்கி கொள்ளும் நஜிப் என்கிற இளைஞனின் கதையாக இது இருக்கிறது.

aadujeevitham

இந்த படத்திற்கு மலையாளம் மற்றும் தமிழில் கொஞ்சம் வரவேற்பு இருந்து வந்தது. அதற்கு தகுந்தாற் போல முதல் நாளே 7.60 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது ஆடுஜீவிதம். கடந்த ஐந்து நாட்களில் மொத்தமாக 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

பொதுவாக உலக தரம் வாய்ந்த திரைப்படங்கள் வசூல் ரீதியான சாதனையை படைக்காது. ஆனால் ஆடு ஜீவிதம் படத்தை பொறுத்தவரை இந்த அளவிற்கு அது வசூல் செய்திருப்பதே பெரும் சாதனைதான். பின் வரும் நாட்களில் 100 கோடியை தாண்டி படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தெலுங்கு மொழியில் பின்னடைவை கண்டுள்ளது ஆடு ஜீவிதம் திரைப்படம்.

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை ஓரந்தள்ளிடுச்சு!.. எப்படியிருக்கு ஆடுஜீவிதம் திரைப்படம்!..

கடந்த சில மாதங்களாக மலையாளத்தில் தொடர்ந்து சிறப்பான திரைப்படங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பிரம்மயுகம், மஞ்சுமல் பாய்ஸ், ப்ரேமலூ ஆகிய மூன்று திரைப்படங்களுமே தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதிலும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூலை படைத்தது. இந்த நிலையில் அந்த வரிசையில் நான்காவது படமாக ஆடுஜீவிதம் திரைப்படம் அமைந்துள்ளது. ஆடுஜீவிதம் திரைப்படமானது உண்மை கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

ப்ளஸ்ஸி என்னும் இயக்குனர் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். 1990 களில் நஜுப் என்னும் இளைஞன் கேரளாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு தொழில் தேடி செல்கிறான். அப்போது அங்கு அவனுக்கு நல்ல வேலைகள் எதுவும் கொடுக்காமல் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலையை கொடுக்கின்றனர்.

அந்த பாலைவனத்தில் அவனை தவிர யாரும் கிடையாது. குடிக்க மட்டும் சிறிதளவு தண்ணீர் கிடைக்கும். குளிப்பதற்கெல்லாம் தண்ணீரே கிடையாது. இப்படி ஒரு நரக வாழ்க்கையில் சிக்கி கொள்ளும் நஜுப் அங்கிருந்து தப்பி கேரளா வந்து சேர்வதுதான் படத்தின் கதை.

இது உண்மையிலேயே நடந்த கதை ஆகும். ஏற்கனவே இது தமிழிலும் மலையாளத்திலும் ஆடுஜீவிதம் என்கிற பெயரிலேயே நாவலாக வந்துள்ளது. இந்த படத்தில் ப்ரித்தீவிராஜ் நஜுப்பாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்புகள் உலகில் உள்ள பல பாலைவனங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஒளிப்பதிவு என்னதான் நாம் ஏ.சி திரையரங்கில் இருந்தாலும் ஏதோ வெயிலுக்கு நடுவே பாலைவனத்தில் மாட்டி கொண்டதாக உணர வைக்கிறது.

ஏ.ஆர் ரகுமானின் இசை படத்தில் டாப் டக்கராக அமைந்துள்ளது. பாலைவனத்தில் மணல் பறக்கும்போது எழும் சிறிய ஓசைகளை கூட கவனமாக பிண்ணனியில் சேர்த்துள்ளார். எனவே ஆடுஜீவிதம் திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தை விடவும் சிறப்பான திரையரங்க அனுபவத்தை தருவதாக கூறப்படுகிறது.

எனவே கண்டிப்பாக இந்த படம் ஆஸ்கருக்கு அனுப்ப தகுதியான படம் என்கின்றனர் திரைப்பட விமர்சகர்கள். மேலும் இது மஞ்சுமல் பாய்ஸை விடவும் அதிக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்தியாவிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எந்த பட குழுவும் அந்த பக்கமே போனது இல்ல!.. உயிருக்கே ஆபத்து!.. ஆனாலும் ரிஸ்க் எடுத்த நடிகர் ப்ரித்திவ்ராஜ்!.

Actor Pritiviraj: தமிழ் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் பிருத்திவிராஜ். பிரித்திவிராஜ் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் மலையாளத்தில் நிறைய திரைப்படங்களை எடுத்திருக்கிறார்.

மலையாளத்தில் அதிக திரைப்படம் தயாரிக்கும் பிரித்விராஜ் ஏன் தமிழில் தயாரிப்பது இல்லை என்று சிலருக்கு கேள்வி உண்டு. மலையாள சினிமாவை பொறுத்தவரை 10 கோடிக்கு உள்ளேயே ஒரு சிறப்பான படத்தை தயாரித்து விட முடியும்.

‘Aadujeevitham’ is slated to be a Pooja release. Photo: Movie poster

ஆனால் தமிழ் சினிமாவில் அதற்கான வாய்ப்பே கிடையாது என்பதால் மலையாளத்தில் திரைப்படங்களை இயக்குகிறார் பிரித்விராஜ். மோகன்லால் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து கூட குறைந்தபட்ஜெட்டில் மலையாளத்தில் திரைப்படம் தயாரிக்க முடியும் என்கிற நிலை இருப்பதால் தொடர்ந்து அவர் அங்கு படம் தயாரித்து வருகிறார்.

படப்பிடிப்பில் பட்ட கஷ்டங்கள்:

இந்த நிலையில் அவர் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ஆடுஜீவிதம். வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்ற இளைஞர் 3 வருடங்கள் பாலைவனத்தில் மாட்டிக் கொள்கிறார். அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

 இந்த படத்திற்கு பெருவாரியான வரவேற்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரித்விராஜ் கூறும்பொழுது கொரோனா சமயத்தில் நாங்கள் ஒரு பாலைவனத்தில் படம் பிடிப்பதற்காக சென்று அங்கு மாட்டிக் கொண்டு விட்டோம்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அந்த பாலைவனத்திலேயேதான் இருந்தோம் திரும்ப ஊருக்கு எப்போது செல்வோம் என்கிற நம்பிக்கை கூட இல்லாமல் இருந்தோம். அதன் பிறகு ஒன்றரை வருடங்கள் படபிடிப்பே நடத்தவில்லை பிறகு மீண்டும் படப்பிடித்து துவங்கிய பொழுது சகாரா பாலைவனத்தின் நடுப்பகுதிக்கு சென்று படப்பிடிப்பை நடத்தினோம்.

இதுவரை மனித காலடி தடங்களே படாத இடங்களுக்கு எல்லாம் படப்பிடிப்பிற்காக சென்றிருக்கிறோம். எனக்கு தெரிந்தவரை இதுவரை திரைப்படம் எடுத்த யாருமே அங்கெல்லாம் சென்றிருக்கவே மாட்டார்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு இந்த திரைப்படம் படமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் பிருத்விராஜ். வருகிற மார்ச் 28 இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.