Tag Archives: கோட்

சார் எய்ட்ஸ் இல்லன்னு சொல்லுங்க சார்..! என்னை வீழ்த்த நினைச்சாங்க.. வெளிபடையாக கூறிய மைக் மோகன்..!

1980களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகர் மைக் மோகன். மூடுபனி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மைக் மோகன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதில் அவருக்கு 1981 இல் வந்த பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்தார்.

அதே சமயம் அப்போதைய காலகட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒரு நடிகராகவும் மைக் மோகன் இருந்து வந்தார். அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிக்கும் கதாநாயகிகளுடன் நெருக்கமாக இருப்பார் என்று அவரை குறித்து சர்ச்சைகள் வந்து கொண்டே இருந்தன.

சர்ச்சைக்கு உள்ளான நடிகர்:

மேலும் நிறைய நடிகைகளை இவர் காதலிப்பதாகவும் அப்பொழுது பேச்சுக்கள் இருந்து வந்தன. சொல்லப்போனால் ஜெமினி கணேசனுக்கு பிறகு காதல் மன்னன் என்று பார்க்கப்பட்டவர் மைக் மோகன். இதனால் அவரை குறித்து தொடர்ந்து பத்திரிகைகள் பேசி வந்தன.

இந்த நிலையில் அவருக்கு நடந்த நிகழ்வு ஒன்றை ஒரு பேட்டியில் கூறுகிறார் அதில் கூறும் பொழுது ”என்னை பற்றி நிறைய எழுதிய பத்திரிகைகள் ஒரு கட்டத்தில் எனக்கு எய்ட்ஸ் இருப்பதாக பத்திரிகைகளில் எழுத துவங்கினர்.

மன உளைச்சலுக்கு உள்ளான மைக் மோகன்:

இதனை தொடர்ந்து என்னை நெருங்கிய நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூட இது குறித்து என்னிடம் கேட்க தொடங்கினார்கள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன். பிறகு பத்திரிகையாளர்களே என்னிடம் வந்து உங்களுக்கு எய்ட்ஸ் இல்லை என்று கூறுங்கள் சார் என்று கேட்டார்கள்.

அவர்களே எனக்கு ஒரு நோய் இருப்பதாக பரப்பி விட்டு பிறகு இல்லை என்று நானே கூற வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். நான் அப்படியெல்லாம் ஏதும் கூற மாட்டேன் நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு என்ன வேண்டுமோ எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன் என்று கூறியிருக்கிறார் மைக் மோகன்.

அந்த சீட்ட போடாத மாப்ள !.. விஜய்யால் சொதப்பிய விசில் போடு பாடல்!.. அடுத்த சிங்கிளுக்கு தெறி ப்ளான் போட்ட யுவன்..!

தமிழில் ஏ.ஆர் ரகுமானுக்கு போட்டியாக களமிறங்கி இப்போது வரை தனக்கென ஒரு ரசிக்கப்பட்டாளத்தை கொண்டிருப்பவர் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

ஏ.ஆர் ரகுமானின் புதுவிதமான இசை தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமான பொழுது இளையராஜாவின் இசைக்கான மார்க்கெட் என்பது குறைய தொடங்கியது. அப்பொழுது களத்தில் இறங்கினார் யுவன் சங்கர் ராஜா.

ஏ.ஆர் ரகுமானுக்கு இணையாக ஒரு இசையை அவரும் கொடுத்தார் தொடர்ந்து அவரது இசைக்கும் ரசிக்கர்கள் இருந்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமானின் ரசிகர்களுக்கும் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்களுக்கும் இடையில் தான் அடிக்கடி பஞ்சாயத்து நடக்கும் என்று கூறலாம்.

யுவனுக்கு வந்த கூட்டம்:

அப்படியெல்லாம் இருந்தும் கூட சின்ன சின்ன திரைப்படங்களுக்கு எல்லாம் சூப்பராக இசையமைத்தார் யுவன் சங்கர் ராஜா. தற்சமயம் கோட் திரைப்படத்தில் அவரது இசை அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்பது குற்றச்சாட்டாக இருந்தது.

விசில் போடு என்று வெளியான அந்த பாடல் அவ்வளவாக கவனத்தை பெரும் வகையில் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கு விஜய்தான் காரணம் என்று தற்சமயம் செய்திகள் வெளியாகி உள்ளன. அதாவது கோட் திரைப்படத்திற்காக விசில் போடு பாடலுக்காக மொத்தம் நான்கு இசைகளை இசை அமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

விஜய் தேர்ந்தெடுத்த பாடல்:

அதில் எந்த பாடலை தேர்வு செய்ய வேண்டும் என்கிற பொறுப்பு விஜய்யிடம்தான் இருந்துள்ளது. அதில் தற்சமயம் வெளியான பாடலை தேர்ந்தெடுத்தது விஜய்தான் அந்த பாடல் இல்லாமல் யுவன் சங்கர் ராஜாவிற்கு வேறு ஒரு பாடல்தான் மிகவும் பிடித்திருந்தது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எப்படியாவது தளபதிக்கு ஒரு வெற்றி பாடலை கொடுத்து விட வேண்டும் என்று சிறப்பான மெலோடி பாடல் ஒன்றை தயாரித்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலுக்கு ஏ.ஐ முறையில் பவதாரணியை பாட வைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

சாதாரணமாகவே மெலோடியில் சிறப்பான பாடல்களை கொடுக்கக் கூடியவர் யுவன் சங்கர் ராஜா. எனவே இந்த பாடல் கண்டிப்பாக பெரும் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் படத்தோட போட்டி போட இதை பண்ணியாகணும்..! கதையையே மாற்றிய விஜய்..

நடிகர் விஜய் எப்போது கட்சி துவங்குகிறேன் என்று கூறினாரோ அப்போது முதலே அவரது திரைப்படங்களுக்கான வரவேற்புகள் என்பது அதிகரிக்க துவங்கி இருக்கிறது.

ஏனெனில் கட்சி துவங்கியதுடன் மட்டுமல்லாமல் 2026க்கு பிறகு சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்திருக்கிறார் விஜய். எனவே இனி விஜய் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே அவரது ரசிகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களாக இருக்கின்றன.

அரசியல் பயணம்:

இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படத்தை பொருத்தவரை இந்த திரைப்படம் ஒரு அறிவியல் புனைவு கதை என்று கூறப்படுகிறது.

thalapathy-vijay1

இதனாலேயே இந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா மாதிரியான முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

விஜய்யும் இரட்டை கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்கள் தோல்வியை கண்டாலும் கூட அதற்குப் பிறகு வந்த பிகில், மெர்சல் மாதிரியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.

கோட் திரைப்படம்:

அதனை தொடர்ந்து கோட் திரைப்படத்திலும் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்சமயம் அந்த திரைப்படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

vijay GOAT

ஏன் திடீரென்று இந்த மாற்றம் என பார்க்கும் பொழுது அஜித் தற்சமயம் நடிக்கும் திரைப்படத்தில் அவர் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது எனவே அவருக்கு போட்டியாகவே விஜய் தற்சமயம் திரைக்கதையை மாற்றி இருக்கலாம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.

ஆனால் இன்னொரு பக்கம் அது ஆடியன்ஸ்காக சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் வரும் பட்சத்தில் இந்த திரைப்படம் அதிக வரவேற்பு பெரும் எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷை விட வெங்கட் பிரபு வேகமா இருக்காரே!.. ரஜினி பட இயக்குனர்கள் கத்துக்கணும்!.

லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கும் முதல் படமாக கோட் திரைப்படம் இருப்பதால் இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் துவங்கியது. ஆனால் மிக வேகமாக படத்தின் படப்பிடிப்பை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஸன் படம் என பரவலாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த படத்தில் பிரபு தேவா நடிகர் பிரசாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஜய்யும் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று படப்பிடிப்பை எடுத்து வந்த வெங்கட் பிரபு படக்குழு ஏற்கனவே முக்கால்வாசி காட்சிகளை படமாக்கிவிட்டனராம்.

GOAT

மேலும் பாதி படத்தை முடித்துவிட்டு அதன் எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகளையும் இப்போதே முடித்து வைத்துவிட்டனராம். இதற்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இதே போல வேகமாக படப்பிடிப்பை நடத்தினார்.

தற்சமயம் அதை விட வேகமாக வெங்கட் பிரபு படப்பிடிப்பை நடத்தி வருகிறார். ஆனால் ரஜினிகாந்திற்கு அமையும் இயக்குனர்கள் மட்டும் வெகு காலங்களாக ஒரே படத்தை இயக்கி வருகின்றனர். அவர்கள் இந்த இயக்குனர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நெட்டிசன்கள்.

கோட் படத்தில் வந்த பஞ்சாயத்தா?.. விஜய் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்ற த்ரிஷா!..

தமிழ் சினிமா நடிகைகளில் பல வருடங்களாகவே வரவேற்பை பெற்று வரும் கதாநாயகியாக த்ரிஷா இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அவர் நடித்த சாமி, லேசா லேசா மாதிரியான படங்களுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

விஜய்யுடன் சேர்ந்து காம்போவாக நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா. ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு த்ரிஷாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் என்பது அவ்வளவாக இல்லாமல் போனது. அந்த சமயங்களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக நயன் தாரா மாறினார்.

ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக விட்ட இடத்தை மீண்டும் பிடித்தார் த்ரிஷா என்றே கூறலாம். மீண்டும் தொடர்ந்து பெரிய நடிகர்கள் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார் த்ரிஷா.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து த்ரிஷா குறித்து சர்ச்சைகள் வெளிவந்துக்கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே அரசியல் வாதிகள், மன்சூர் அலிக்கான் போன்ற நடிகர்கள் கூட த்ரிஷா குறித்து சர்ச்சைகளை கிளப்பி வந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் த்ரிஷாவும் பேசி வந்தார். இந்த நிலையில் தற்சமயம் விமான நிலையத்தில் த்ரிஷாவை பார்த்து கில்லி மறுவெளியீடு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டப்போது அதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார் த்ரிஷா.

சமீபத்தில்தான் கோட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாடியதாக கூறியிருந்தார்கள். அந்த பாடலின் படப்பிடிப்பின்போது த்ரிஷாவிற்கும் விஜய்க்கும் மன கசப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவர் குறித்து கேட்ட கேள்விக்கு த்ரிஷா பதில் சொல்லாமல் செல்கிறார் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

ஆனால் சொந்த பிரச்சனைகள் கூட அப்போது காரணமாக இருந்திருக்கலாம். எந்த மனநிலையில் இருந்தாலும் மைக்கை நீட்டினால் பத்திரிக்கையாளரிடம் பேச வேண்டும் என நினைப்பது தவறு என த்ரிஷா ரசிகர்கள் இதுக்குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.

கோட் படத்தில் இடம்பெற்ற விஜயகாந்த் காட்சி!.. காட்சியை பார்த்த விஜயகாந்த் குடும்பம் ரியாக்சன் என்ன தெரியுமா?

விஜய் நடிப்பில் அடுத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம்தான் கோட் திரைப்படம். அதிக அளவிலான மக்கள் மத்தியில் ஏற்கனவே இந்த படம் ஆவலை ஏற்படுத்தி வருகிறது.

விஜய்யுடன் நடிகர் பிரசாந்த்,பிரபுதேவா போன்ற முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். இளைஞராக வரும் விஜய் முதிய விஜய்க்கு வில்லனாக இருப்பார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன.

GOAT

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ஏ.ஐ முறையில் விஜயகாந்தை நடிக்க வைப்பது குறித்தும் பேச்சுக்கள் சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் விஜயகாந்த் குடும்பத்திடம் இதற்காக அனுமதி கேட்டிருந்தார் வெங்கட் பிரபு. ஒருவழியாக அவர் அனுமதி கொடுக்கவே விஜய்யும் விஜயகாந்தும் சேர்ந்து சண்டை போடுவது போல காட்சி ஒன்றை அமைந்துள்ளனராம்.

இந்த காட்சி மிக பிரமாதமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் பிரபாகரன் காலத்தில் விஜயகாந்த் எப்படி இருந்தாரோ அப்படியே இந்த படத்திலும் வருகிறாராம். இதனை பார்த்த விஜயகாந்தின் குடும்பத்துக்கே மிகவும் ஆனந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த காட்சிகள் தத்ரூபமாக அமைந்துள்ளதாம்.

மூணுல ஒரு பங்கு பணம் கைக்கு வந்திடுச்சு!.. சேட்டிலைட் உரிமத்திலையே சம்பாதித்த கோட் திரைப்படம்!..

விஜய் நடிப்பில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் கோட். லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்து வரும் கோட் திரைப்படம் இந்த வருடம் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது. படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.

படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் வருகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் பெரும் பட்ஜெட் படமாக கோட் இருக்கும் என கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட இந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி என பேச்சுக்கள் இருக்கின்றன. பொதுவாகவே விஜய் திரைப்படங்களின் படப்பிடிப்பு துவங்கும்போதே அந்த படத்திற்கான சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி உரிமங்கள் விற்பனையாகிவிடும்.

GOAT

ஆனால் கோட் திரைப்படத்திற்கு மட்டும் இன்னமும் சாட்டிலைட் ரைட்ஸ் விற்காமல் இருந்தது. ஏனெனில் முன்பே சன் டிவி இந்த படத்திற்கான சாட்டிலைட் உரிமத்தை வாங்கியிருந்தது. ஆனால் ஏதோ பிரச்சனை காரணமாக அது படத்தை திரும்ப அளித்துவிட்டது.

இந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ டிவி நிறுவனம் வாங்கியிருக்கிறதாம். கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை ஜீ டிவி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தயாரிப்பு நிறுவனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

இந்த ரூல்ஸுக்கெல்லாம் ஓ.கேன்னா கேப்டனை உங்க படத்துல காட்டிக்கலாம்!.. கோட் படத்தில் பிரேமலதா போட்ட கண்டிஷன்!.

தற்சமயம் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் கோட் இந்த திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம் என கூறப்படுகிறது. இதில் விஜய் வெகு காலங்களுக்கு பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தையும் கொண்டு வருவதற்கு வெங்கட் பிரபு ஆசைப்பட்டுள்ளார்.

விஜய்யின் முதல் படம் தோல்வியடைந்தப்போது அவருக்கு இரண்டாவதாக தனது படத்தில் வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த். ஆனால் விஜய் வளர்ந்த பிறகு விஜயகாந்தை தனது திரைப்படத்தில் சேர்த்துக்கொள்ளவே இல்லை. இந்த நிலையில் அவர் இறந்த பிறகு மட்டும் எதற்கு ஏ.ஐ தொழில்நுட்பம் எல்லாம் பயன்படுத்தி அவரை கொண்டு வருகின்றனர் என கேள்விகள் எழுகின்றன.

ஆனால் இதுக்குறித்து பிரேமலதா பதிலளிக்கும்போது ஏற்கனவே இந்த விஷயம் குறித்து வெங்கட் பிரபு என்னிடம் கேட்டிருந்தார். இந்த விஷயத்தை பொறுத்தவரை நான் கேப்டனின் இடத்தில் இருந்துதான் சிந்திக்க வேண்டும். கோட் திரைப்படத்தில் ஏ.ஐ முறையில் கேப்டனை காட்ட உள்ளோம் அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என கேட்டுள்ளனர்.

GOAT

விஜய் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் மீது அதிக மரியாதை கொண்டவர் கேப்டன். அவர் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக இதற்கு நல்ல முடிவையே சொல்லி இருப்பார். எனவே தேர்தல் முடிந்து விஜய் எங்களை சந்திப்பதாக கூறியுள்ளார். அவருக்கு நல்ல முடிவை கூறுவதாக வெங்கட்பிரபுவிடம் கூறியுள்ளேன் என்கிறார் பிரேமலதா.

ஆனால் விஜயகாந்தின் காட்சிகளை இறுதியாக பிரேமலதாவிடம் காட்டிவிட்டுதான் வெளியிட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இதற்காக எந்த தொகையும் வேண்டாம் என கூறிவிட்டாராம் பிரேமலதா

கோட் படத்தை என்னடா பண்ணி வச்சசிருக்கீங்க!.. போஸ்டரை பார்த்து அதிர்ச்சியான வெங்கட் பிரபு!..

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. இதனையடுத்து தற்சமயம் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம்தான் கோட்.

கோட் திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா இரண்டு மாநிலங்களிலுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டன.

வழக்கமாக நகைச்சுவையாக வெங்கட் பிரபு ஏதாவது செய்வது வழக்கம். அப்படியாக இன்று ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில் டபுள் டக்கர் என்னும் படத்தின் போஸ்டர் இடம் பெற்றிருந்தது. அதில் அந்த பொம்மைகள் ஒரு ஆட்டின் மீது அமர்ந்திருப்பதாக போஸ்டர் இருந்தது.

அதை பதிவிட்ட வெங்கட் பிரபு என் ஆட்டை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இது தற்சமயம் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய்யோடு போட்டி போட வேண்டாம்!… விட்டுக்கொடுத்த ரஜினி!.. லோகேஷ்தான் காரணமா?..

விஜய் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இன்னும் ஒரு திரைப்படத்தில் விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோட் திரைப்படத்தை விடவும் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மீதுதான் பொது மக்களும், மீடியாக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்தாலும் இன்னும் இரண்டு படங்கள் மட்டுமே தளபதி நடிப்பார் என்பதால் அந்த படங்கள் குறித்தும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் முதல் பாடலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் நாள் வெளியிட முடிவு செய்திருக்கிறதாம் கோட் படக்குழு. இந்த திரைப்படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடல்தான் கண்டிப்பாக வெளியாக இருக்கிறது என கூறப்படுகிறது.

GOAT

இதே நிலையில் தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் அன்னோன்ஸ்மெண்ட் மற்றும் படத்தின் க்ளிம்ஸ் காட்சிகளை ஏப்ரல் 14 இல் வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் பிறகுதான் அதே தேதியில் விஜய் படத்தின் பாடல் வெளியாகிறது என தெரிந்துள்ளது.

இந்த நிலையில் விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் க்ளிம்ஸ் வெளியிடும் தேதியை மாற்றுமாறு படக்குழுவிடம் கூறிவிட்டாராம். ஏற்கனவே ரஜினிக்கும் விஜய்க்கும் போட்டி என்று பல காலங்களாக பேச்சு இருந்து வந்தது. இப்போதுதான் அது அமைதியாகி இருக்கிறது.

thalaivar-171

இப்போது மீண்டும் ஒரே நாளில் பட அப்டேட்டுகளை வெளியிட்டால் அது பிரச்சனையை உண்டாக்கும் என்பதால்தான் ரஜினிகாந்த் தேதியை மாற்றியுள்ளார் என கூறப்படுகிறது. அதே சமயம் ஏற்கனவே விஜய்யை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ்.

அவர்தான் தலையிட்டு இப்படி தேதியை மாற்றியுள்ளார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

உங்க விலை கட்டுப்படியாகாது… நாங்க சொல்றதுதான் விலை!.. ஓ.டி.டி விற்பனையில் சருக்கலை சந்தித்த கோட் திரைப்படம்!..

லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ஒரு டைம் ட்ராவல் திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

கிட்டத்தட்ட கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. ஆனாலும் படத்தின் ஓ.டி.டி உரிமத்தை விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்பு கொடுத்த அளவிலான விலையை கொடுக்க இப்போது ஓ.டி.டி நிறுவனங்கள் தயாராக இல்லை என கூறப்படுகிறது.

GOAT

ஏனெனில் முன்பை போல இப்போது பலரும் ஓ.டி.டியை பயன்படுத்துவதில்லை. எனவே அவர்கள் பெரும் தொகையை எல்லாம் கொடுத்து திரைப்படங்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில் லியோ திரைப்படம் 126 கோடிக்கு ஓ.டி.டிக்கு விற்கப்பட்டது. தமிழ் சினிமாவிலேயே அதிக விலைக்கு ஓ.டி.டியில் விற்பனையான திரைப்படம் லியோ திரைப்படம்தான்.

எனவே அதை விட அதிக விலைக்கு அதாவது 160 கோடிக்கு கோட் திரைப்படத்தை ஓ.டி.டிக்கு விற்கலாம் என முடிவு செய்தனராம் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தினர். ஏனெனில் இந்த படத்திற்கு விஜய்க்கு சம்பளமாகவே 200 கோடி கொடுத்திருக்கின்றனர்.

ஆனால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது 80 கோடி ரூபாய்க்கு வேண்டுமானால் வாங்கி கொள்கிறோம் என அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் வெகு நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு 110 கோடிக்கு விற்பனையாகியுள்ளது கோட் திரைப்படம்.

விஜய்க்கு ரசிகரிடம் இருந்து வந்த மெசேஜ்.. அவரது ஆசையை உடனே நிறைவேற்றிய விஜய்!..

Thalapathy Vijay: லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக விஜய் இருந்து வருகிறார்.

லியோ திரைப்படமே எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு ப்ளான் செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் அதற்குள்ளாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்.

thalapathy-vijay1

விஜய் தமிழக வெற்றி கழகத்தை துவங்கியது முதல் அவர் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் இறுதி காட்சிகளை படம் பிடிப்பதற்காக தற்சமயம் கேரளாவிற்கு சென்றுள்ளனர் கோட் படக்குழுவினர்.

ரசிகருக்காக விஜய் செய்த செயல்:

அங்கு அலைக்கடலென திரண்டிருக்கும் விஜய் ரசிகர்கள் தினமும் விஜய்யை காண்பதற்காக காத்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் சைலஜ் என்னும் அவருடைய ரசிகர் ஒருவர் விஜய்யை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவர் மாற்று திறனாளி என்பதால் இந்த கூட்டங்களுக்கு நடுவே சென்று அவரால் விஜய்யை பார்க்க முடியாது.

இருந்தாலும் எப்படியாவது விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டுள்ளார். இந்த விஷயத்தை அறிந்த அவரது நண்பர் உடனே விஜய்க்கு ஒரு மெயில் செய்துள்ளார்.  அந்த மெயிலை பார்த்த விஜய் கண்டிப்பாக அவரை சந்திப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே சைலஜை வர சொல்லி அவரை சந்தித்திருக்கிறார் தளபதி. தற்சமயம் இந்த புகைப்படங்கள்தான் வைரலாகி வருகின்றன.