நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் அதிக பிரபலமாகி வருகிறது.
சூர்யா ஆர்யா குறித்து சில விஷயங்களை பேசி இருந்தார். ஆர்யாவை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் பல காலங்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்தவர் ஆர்யா.
பிறகு அவர் நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக்கொண்டார். அதே சமயம் திருமணத்திற்கு பிறகு மற்ற நடிகர்கள் போல தன்னுடைய மனைவியை திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று வீட்டிற்குள் அடைத்து வைக்காமல் தொடர்ந்து தனது மனைவி நடிப்பதற்கு துணையாக நின்றார் ஆர்யா.
கஷ்டப்பட்ட சூர்யா:
அதனை தொடர்ந்து சாயிஷா இப்பொழுது வரை தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இதில் ஹைலைட்டாக ஆர்யாவே நடித்த காப்பான் திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் சாயிஷா.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சூர்யா அவர் பேட்டியில் கூறும் பொழுது அந்த படத்தில் எனக்கு சங்கடமாக இருந்த விஷயங்கள் எல்லாம் ஆர்யாவிற்கு கொடுக்க வேண்டிய டயலாக்குகளை எனக்கு கொடுத்திருந்தனர்.
நானும் சாய்ஷாவும் காதலிப்பது போன்ற காட்சிகள் இருந்தது அந்த காட்சிகளை ஆர்யா முன்னாடியே நடிப்பது கஷ்டமாக இருந்தது என்று கூறியிருக்கிறார் சூர்யா.
Actor Santhanam: சின்ன திரையில் நகைச்சுவை கலைஞராக இருந்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் சந்தானத்திற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் என்பது இல்லாமல்தான் இருந்தது.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது நகைச்சுவைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்க துவங்கியது. இதனை தொடர்ந்து அஜித், ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க துவங்கினார். மேலும் இயக்குனர் ராஜேஷ் இயக்கும் காமெடி திரைப்படங்களில் சந்தானத்திற்குதான் முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டது.
அவர் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற திரைப்படங்கள் சந்தானத்திற்கு முக்கியமானவை. தற்சமயம் சந்தானம் ஹீரோவாக நடிக்க துவங்கிவிட்டார். அவரது படங்களில் ஒரு சில படங்கள் நல்ல வெற்றியை பெறுகின்றன.
Santhanam
ஒரு சில தோல்வியடைகின்றன. ஆனால் காமெடி நடிகராக இருந்தப்போதே உதயநிதியில் துவங்கி பல நடிகர்களுடன் நெருக்கமானார் சந்தானம். இதனால் அவரது சினிமா வட்டாரம் என்பது கொஞ்சம் பெரிது என்றே கூறலாம். அதே போல நடிகர் ஆர்யாவும் சந்தானமும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
சந்தானம் ஆர்யா குறித்து ஒரு பேட்டியில் கூறும்போது கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி நல்லா ஆட்டம் போட்டுட்டு இருந்தான். ஆனால் கல்யாணத்துக்கு பிறகு இப்போ எப்ப போன் பண்ணுனாலும் குழந்தைக்கு பேம்பர்ஸ் மாத்துறேன், பால் ஊட்டி விடுறேன்னு ஏதாவது சொல்லிட்டு இருக்கான். ஒரு நாளைக்கு ஒரு மூன்று முறையாவது ஆர்யாவுக்கு போன் செய்துவிடுவேன் என்கிறார் சந்தானம்.
Actor Arya: தமிழ் சினிமாவில் பெரிதாக நடிப்பு வராவிட்டாலும் கூட வரக்கூடிய சிறிதளவு நடிப்பை வைத்து அதற்கான கதை களங்களை தேர்ந்தெடுத்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் நடிகர்கள் உண்டு. அப்படியான நடிகர்களில் நடிகர் ஆர்யாவும் ஒருவர். ஆர்யாவிற்கு செண்டிமெண்ட் காட்சிகள் அவ்வளவாக ஒத்து வராது.
ஆனால் காமெடி மற்றும் சீரியஸ் காட்சிகளில் அவரால் சிறப்பாக நடிக்க முடியும். ஆர்யா, விஷால், விஷ்ணு விஷால் எல்லாம் நண்பர்கள் ஆவர். எல்லாம் ஒரே சமயத்தில்தான் சினிமாவிற்கு வந்தனர். சினிமாவிற்கு வந்து வெகு நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தார் ஆர்யா.
இந்த நிலையில்தான் இந்தியாவில் வேறு மொழிகளில் எல்லாம் ஏற்கனவே வெற்றியாக ஒளிப்பரப்பாகி வந்த வியாகம் 18 நிறுவனத்தின் சேனலான கலர் சேனல் தமிழிலும் ஒளிப்பரப்பாக துவங்கியது.
இந்த டிவியை பிரபலப்படுத்துவதற்காக எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியின்ப்படி நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் பெண்கள் போட்டியில் கலந்துக்கொள்ளலாம்.
பல சுற்றுகளை தாண்டி ஆர்யாவிற்கு பிடிக்கும் பெண் அவரை திருமணம் செய்துகொள்ள முடியும். இந்த நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்கினார். இதில் பெண்களுக்கு எல்லாம் ஆசை காட்டி இறுதியில் யாரையும் தேர்ந்தெடுக்காமல் ஏமாற்றிவிட்டார் ஆர்யா என்றொரு குற்றச்சாட்டு உண்டு.
Actress sangeetha
பிறகு நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக்கொண்டார் ஆர்யா. இதனால் அப்போதே சினிமா ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றினர். அப்படி விமர்சிக்கும்போது அதில் நடிகை சங்கீதாவையும் வைத்து செய்தனர். பிறகு ஒரு பேட்டியில் இதுக்குறித்து சங்கீதா கூறும்போது பொது மக்களை ஏமாற்றும் எந்த நிகழ்ச்சிக்கும் நான் துணை போக மாட்டேன்.
ஆரம்பத்தில் நான் ஆர்யாவிடம் கேட்டப்போது நிஜமாகவே இந்த நிகழ்ச்சியின் வழியாக தேர்ந்தெடுக்க போவதாகதான் கூறினான். ஆனால் இறுதியில் அவனால் யாரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை என கூறியிருந்தார். இதற்கும் உருட்டாதீங்கள் என்று ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
Tamil Actor Arya :2005 இல் வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் பிறகு அவர் நடித்த கலாப காதலன், பட்டியல், வட்டாரம் போன்ற அனைத்து திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி திரைப்படங்களாகவே அமைந்தன.
அதற்குப் பிறகு 2009 இல் வந்த நான் கடவுள் திரைப்படம் ஆர்யாவின் திரை வாழ்க்கையை திருப்பி போடும் திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகும் மதராசப்பட்டினம், அவன் இவன், வேட்டை போன்ற குறிப்பிடும் படியான படங்கள் அதிகமாக வந்த வண்ணம்தான் இருந்தது.
arya
ஆனால் கடந்த சில வருடங்களாக அவருக்கு நல்ல படம் என்று எதுவுமே அமையவில்லை என்று கூறலாம். 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் நடித்த திரைப்படத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் மட்டுமே கொஞ்சம் பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது.
இந்த நிலையில் போன வருடம் இவர் நடித்த கேப்டன் என்கிற திரைப்படம் வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான ப்ரேடட்டர் என்கிற திரைப்படத்தின் தழுவல் ஆகும் அந்த படத்தை திரும்ப தமிழில் எடுத்து வைத்திருக்கின்றனர் அதுவும் ஒழுங்காக எடுக்கவில்லை என்று அந்த படம் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில் தற்சமயம் வில்லேஜ் என்கிற டிவி சீரியஸில் நடித்திருக்கிறார் ஆர்யா. இந்த சீரியஸும் கூட ஹாலிவுட்டில் வந்த ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் என்னும் சீரிசின் காப்பிதான் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்த சீரியஸின் ட்ரெய்லர் வெளியான நிலையில் கிட்டத்தட்ட அது ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் கதையின் காப்பி போல தான் தெரிகிறது. இதனை அடுத்து மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார் ஆர்யா.
Actor karthi and Arya: சரியான திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது எப்போதுமே ஒரு நடிகருக்கு சவாலான விஷயமாகும். சரியான கதையை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அது அவர்களுக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு கூட இருக்கிறது.
அப்படியான சம்பவம் ஒன்று ஆர்யாவிற்கு நடந்துள்ளது. நடிகர் கார்த்திக்கு ஒரு கதை நடிப்பதற்கு வந்துள்ளது. அந்த படத்தின் கதையை கேட்ட கார்த்தி இந்த கதை எனக்கு ஒத்து வராது. வேறு யாரையாவது கேட்டு கொள்ளுங்கள் என கூறிவிட்டார். ஏனெனில் கார்த்தி திரைப்படங்களின் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.
அதனால்தான் அவரால் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுக்க முடிகிறது என அவரது ரசிகர்கள் நினைக்கின்றனர். இந்த நிலையில் அதே கதையை எடுத்து கொண்டு இயக்குனர் ஆர்யாவிடம் சென்றுள்ளார். அந்த கதையை கேட்ட ஆர்யாவிற்கு படம் பிடித்துவிடவே அதில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்கிறார் ஆர்யா.
இதற்கு நடுவே கார்த்தியை ஒருமுறை சந்திக்கிறார் ஆர்யா. அப்போது கார்த்தி “மச்சி நீ அந்த படத்துல நடிக்கிறேன்னு கேள்விப்பட்டேன்” என கேட்டுள்ளார். ஆர்யாவும் அதற்கு ஆமாம் என கூறிவிட்டு நீ ஏன் அந்த படத்தை வேண்டாம் என்றாய் என கார்த்தியிடம் கேட்டிருக்கிறார்.
இல்லை அந்த கதை எனக்கு செட் ஆகாது என வெளிப்படையாக கூறிய கார்த்தி அந்த படத்தில் கொஞ்சம் கவனமாக நடிக்குமாறும் கூறியுள்ளார். அதன் பிறகு வெளியான அந்த படம் தோல்வியை கண்டது. இதை ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறிய ஆர்யா, “அப்போதே முடிவு செய்துவிட்டேன், இனி கார்த்தி நிராகரிக்கும் திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று” என கூறியுள்ளார்.
தமிழில் சில இயக்குனர்களின் படங்களுக்கு மட்டும் வெகுவாக மதிப்பு இருந்து வரும். சொல்ல போனால் அந்த இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு கதாநாயகர்களே விருப்பம் தெரிவிப்பார்கள்.
அப்படியான இயக்குனர்களின் முக்கியமானவர் இயக்குனர் பாலா. அவரது திரைப்படத்தில் ஒரு நடிகர் நடித்து விட்டால் அவருக்கு பிறகு எக்கச்சக்கமாக வாய்ப்புகள் வரும் என்று தமிழ் சினிமாவில் ஒரு பேச்சு உண்டு. ஏனெனில் அந்த அளவிற்கான ஒரு நடிப்பை பாலா தனது திரைப்படத்தில் வாங்கிவிடுவார்.
இப்படியாக நான் கடவுள் திரைப்படத்தை பாலா இயக்கிய பொழுது அதில் முதன்முதலாக நடிக்க இருந்தவர் நடிகர் அஜித். ஆனால் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு காலதாமதம் ஆனதால் அஜித் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.
அதனை அடுத்து அந்த திரைப்படத்தில் ஆர்யாவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்ட து. ஆர்யா அந்த படத்தில் சேர்ந்த பொழுது படத்தில் முதலில் கஷ்டமான காட்சிகளை படமாக்கி விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆர்யா தலைகீழாக இருக்கும் காட்சியை படமாக்க முடிவு செய்தனர்.
ஆனால் ஆர்யாவிற்கு அந்த தியான முறையை செய்ய தெரியாது. இதனை அறிந்த பாலா அவருக்கு ஒரு வாரத்திற்குள் அந்த தியானத்தை கற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதேபோல ஆர்யாவும் ஐந்து நாட்களிலேயே அந்த தியானத்தை கற்றுக்கொண்டு படத்திலும் செய்திருந்தார்.
அதனைப் பார்த்து ஒரு நிமிடம் பாலாவே அதிர்ச்சி ஆகிவிட்டாராம். ஏனெனில் அதை முழுமையாக கற்றுக்கொள்ள ஒரு மாத காலம் ஆகுமாம் ஆனால் வெறித்தனமாக பயிற்சி செய்து அதை ஒரே வாரத்தில் கற்று முடித்தார் ஆர்யா என்று தனது பேட்டியில் பாலாவை கூறியிருக்கிறார்
தமிழ் சினிமாவில் ’பருந்திவீரன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியாமணி. மலைக்கோட்டை, ராவணன் என பல படங்கள் நடித்த ப்ரியாமணி சில காலம் சினிமாவில் காணாமலே போய்விட்டார். பின்னர் இந்தியில் வெளியான ஃபேமிலிமேன் வெப் சிரிஸ் மூலம் மீண்டும் பிரபலமானார்.
தற்போது ஜவான் படத்தில் ஷாரூகானுடன் முக்கிய ரோலில் நடித்து நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார் ப்ரியாமணி. இந்நிலையில்தான் ஜவான் படத்தில் தான் இணைந்தது குறித்த சுவாரஸ்யமான சம்பவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் “ஒருநாள் எனக்கு ஒரு கால் வந்திச்சு. பிஆர் ஒருத்தர் பேசினார். ஒரு படத்துல கேரக்டர் ரோல் பண்ணனும். அட்லீதான் டைரக்டர்ன்னு சொன்னார். அட்லீ படம்னா ஓகேதான் எனக்கு பிரச்சினையில்லன்னு சொன்னேன். சார் உங்ககிட்ட உங்க கேரக்டர் பத்தி விரிவா சொல்லுவார்னு சொன்னார்.
எனக்கு வீடியோ கால் வந்துச்சு அதுல அட்லீ சார் இருந்தார். என்ன ப்ராஜெக்ட்னு எனக்கு தெரியாது. கூடவே ஆர்யாவும் இருந்தான். நீ என்ன இங்க பண்றேன்னு நான் ஷாக்கிங்கா கேட்டேன். இல்லை அட்லீ என் ஃப்ரெண்ட் சோ சும்மா வந்தேன்னு சொன்னான். அப்புறம் அட்லீ சார் என் கேர்க்டர் பத்தி சொன்னார்.
கடைசியாதான் படத்தில ஹீரோ ஷாருக்கான்னு சொன்னார். எனக்கு சர்ப்ரைஸா இருந்துச்சு. இதை முதல்லையே சொல்லிருக்கலாமே.. டாக்குமெண்ட்ல எங்க கையெழுத்து போடணும் சொல்லுங்கன்னு கேட்டேன்” என்று தனது நினைவுகளை பகிந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்தானம். காமெடியில் பல வகையான உச்சத்தை தொட்ட பிறகு சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டார்.
எடுத்த உடனேயே சீரியஸான கதாநாயகனாக நடித்தால் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் முதலில் காமெடி கதாநாயகனாக நடித்தார் சந்தானம். போக போக அவரது திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளையும் சேர்க்க துவங்கினார்.
இப்போது அவர் ஆக்ஷன் படம் நடித்தாலும் கூட அதை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஹீரோவாக நடிக்க துவங்கினாலும் கூட மக்கள் மத்தியில் பெரிதாக தன்னை காட்டி கொள்ளாமலே இருந்தார் சந்தானம். இந்த நிலையில் தற்சமயம் யு ட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க துவங்கியுள்ளார் சந்தானம்.
அதில் அவரிடம் கேள்வி கேட்கும்போது உங்கள் காரை ஆர்யா அல்லது ஜீவா இருவரில் யார் ஓட்ட வேண்டும் என ஆசைப்படுவீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த சந்தானம் ஆர்யா சூப்பராக கார் ஓட்டுவான். பி.எம்.டபுள் யுவில் மினி கூப்பர் என்கிற காரை வாங்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன்.
ஆனால் எனக்கு முன்பு அந்த காரை அவன் வாங்கிவிட்டான் என ஆர்யா குறித்து சந்தானம் பதிலளித்திருந்தார்.
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பையா. பருத்திவீரன் திரைப்படத்திற்கு கார்த்தி இந்த படத்தில் நடித்தார்.
அந்த கார்த்தியே இது என்ற வியப்பிலேயே பலரும் படத்திற்கு சென்றனர். ஒரு சிம்பிளான கதையை மக்கள் விரும்பும் வகையில் திரைப்படமாக்கியிருந்தனர்.
அந்த வகையில் அதன் இரண்டாம் பாகம் ஒன்று எடுக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் லிங்குசாமி. பொதுவாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என வந்தால் முதல் பாகத்து கதையை எடுத்து அதில் சில மாற்றங்களை செய்து நட்சத்திரங்களை மட்டும் மாற்றி திரும்ப அப்படியே எடுப்பது வழக்கம். மற்றபடி முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்பந்தமே இருக்காது.
முனி, அரண்மனை போன்ற படங்கள் இப்படியாகதான் இருக்கும். இதில் பாகுபலி, எந்திரன் போன்ற சில படங்கள் விதி விலக்கு. இந்த முனி, அரண்மனை ரகத்தில்தான் பையா 2வும் வர உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் கதாநாயகனாக ஆர்யாவும், கதாநாயகியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இன்னும் எந்த அதிகார தகவல்களும் வரவில்லை. ஆனால் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் நடிகர் நடிகையராக இருந்து காதல் செய்து திருமணம் செய்துக்கொண்ட ஜோடிகளில் சாயிஷா ஆர்யாவும் முக்கியமானவர்கள்.
தமிழில் வனமகன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. முதல் படத்திலேயே அவருக்கு மிகப்பெரும் ரசிக பட்டாளம் ஒன்று உருவாகிவிட்டது.
இதனை அடுத்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்றார் சாயிஷா. அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்களில் நடித்தார். 2018 இல் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்தார். இதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் காதலானது.
சில நாட்களில் இருவரும் திருமணாம் செய்துக்கொண்டனர். அதன் பிறகு காப்பான் மற்றும் டெடி என்ற இரு திரைப்படங்களில் நடித்தார் சாயிஷா. பிறகு கர்ப்பமாக இருந்ததால் 2021 க்கு பிறகு அவர் நடிக்கவில்லை.
சாயிஷாவிற்கு குழந்தை பிறந்த புதிதில் அந்த போட்டோக்களை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு தற்சமயம் தனது குழந்தையின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சாயிஷா. இந்த புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
மற்ற சினிமா ரசிகர்களை விடவும் தமிழ் சினிமா ரசிகர்கள் சில விஷயங்களில் மாறுப்பட்டு காணப்படுகின்றனர். ஒரு திரைப்படத்தில் பெரும் கதாநாயகர்கள் நடித்திருந்தால் போதும், உடனே ஹிட் அடித்துவிடும். இது மற்ற மொழி சினிமாக்களில் உள்ள சங்கதி.
ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரிய கதாநாயகர்கள் நடித்திருந்தாலும் கூட கதை சரியாக இல்லை என்றால் அந்த படம் ஓடாது. உதாரணத்திற்கு சுறா, கோச்சடையான் போன்ற திரைப்படங்களை கூறலாம்.
அதே போல இந்த வருடம் வெளியாகி பெரும் தோல்வியுற்ற பத்து படங்களை இப்போது பார்க்கலாம்.
01.கோப்ரா
தமிழில் 2020 ஆம் ஆண்டு முதலே பல்வேறு நாடுகளுக்கு சென்று பெரும் பொருட் செலவில் தயாரான திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் நடிகர் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இயக்குனர் அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கியிருந்தார்.
கே.கி.எஃப் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. வெகுவாக விமர்சனத்துக்கு உள்ளானது.
02.கேப்டன்
நடிகர் ஆர்யா நடிப்பில் தமிழில் வெளியான சயின்ஸ்பிக்ஸன் த்ரில்லர் திரைப்படம் கேப்டன். இந்த படத்தை இயக்குனர் சக்தி செளந்தர் இயக்கியிருந்தார். இந்த படத்தை ஆர்யாவே தயாரித்தார்.
பிரிடேட்டர் என்கிற ஹாலிவுட் படத்தின் கதையை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. ஆனால் படம் வெற்றியடையவில்லை.
03.என்ன சொல்ல போகிறாய்
இந்த வருடம் வந்த படங்களில் பெயர் கூட தெரியாத அளவிற்கு சில படங்கள் மக்கள் மத்தியில் தெரியாமல் போனது. அதில் என்ன சொல்ல போகிறாய் திரைப்படமும் ஒன்று.
இந்த படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் கதாநாயகனாக நடித்திருந்தார். தேஜூ அஸ்வினி கதாநாயகியாக நடித்திருந்தார். காதல் கதையை கருவாக கொண்ட இந்த படம் ஒரு வாரம் கூட திரையரங்கில் ஓடவில்லை என கூறப்படுகிறது.
04.ப்ரின்ஸ்
இந்த வருடம் பெரும் நடிகர்கள் நடித்து ப்ளாப் அடித்த படங்களில் முக்கியமான திரைப்படம் ப்ரின்ஸ். சிவகார்த்திகேயன் நடித்த இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார்.
ஆனால் அந்த சமயத்தில் வந்த சர்தார் படத்துக்கே மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ப்ரின்ஸ் திரைப்படத்தில் கதையே இல்லை என கூறப்பட்டது. பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்திய படமாக ப்ரின்ஸ் உள்ளது.
05.வீரமே வாகை சூடும்
விஷால் நடிப்பில் வெளியாகி குறைந்த வசூலை செய்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தை இயக்குனர் பா.சரவணன் இயக்கியிருந்தார். த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெகுவாக வரவேற்பை பெறவில்லை.
06.காஃபி வித் காதல்
பெரும் நட்சத்திர பட்டாளத்தை வைத்து இயக்குனர் சுந்தர் சியால் எடுக்கப்பட்ட திரைப்படம் காஃபி வித் காதல். ஆனால் அந்த படம் வெளியான அதே சமயம் லவ் டுடே திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமானது.
காஃபி வித் காதல் திரைப்படத்தில் ஜெய்,ஜீவா,திவ்ய தர்ஷினி,ஸ்ரீகாந்த் இன்னும் பலர் நடித்திருந்தனர். ஆனால் படம் தோல்வியை கண்டது.
07.ஐங்கரன்
நடிகர் ஜி.வி பிரகாஷ் நடித்து இந்த வருடம் வெளியான திரைப்படம் ஐங்கரன். இந்த படத்தை இயக்குனர் ரவி அரசு இயக்கியிருந்தார். ஜி.வி பிரகாஷ் இதில் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. இதனால் படம் தோல்வியை கண்டது.
08.இடியட்
நகைச்சுவை நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான காமெடி ஹாரர் திரைப்படம் இடியட். இந்த படத்தை தில்லுக்கு துட்டு திரைப்படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கியிருந்தார்.
ஆனால் தில்லுக்கு துட்டு அளவிற்கு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் படம் படு தோல்வியை கண்டது.
09.கொம்பு வச்ச சிங்கம்டா
நடிகர் சசி நடித்து இந்த வருடம் வெளியான திரைப்படம் கொம்பு வச்ச சிங்கம்டா. வந்த வேகத்திற்கு அனைத்து திரையரங்கை விட்டும் இந்த படத்தை எடுத்துவிட்டனர்.
படத்திற்கு எந்த ஒரு கூட்டமும் வரவில்லை என்பதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கியிருந்தார்.
10.மாறன்
தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படம் எதிர்பாராத விதமாக இந்த வருடம் தோல்வியை கண்டது. இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
படம் மிகவும் போர் அடிக்கும் விதமாக உள்ளது என இந்த படம் குறித்து கூறப்படுகிறது.
11.டி.எஸ்.பி
இந்த வருடம் பெரும் தோல்வி கண்ட ஹீரோக்கள் வரிசையில் விஜய் சேதுபதியும் கூட இருக்கிறார். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் டி.எஸ்.பி.
உள்ளூர், வெளிநாடு என எங்கேயுமே இந்த படத்திற்கு கூட்டமே வரவில்லை. திரையரங்கில் தோல்வியை கண்டதால் வெகு சீக்கிரமாகவே இந்த படத்தை ஓ.டி.டிக்கு கொடுத்துவிட்டனர்.
தமிழில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ஆர்யா. நான் கடவுள் திரைப்படம் ஆர்யாவிற்கு மிக முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படம் தமிழில் வெளியாகி ஆர்யாவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பிறகு அதிக பட வாய்ப்புகளை பெறுவதற்கும் கூட இந்த படமே முக்கிய காரணமாக அமைந்தது.
பொதுவாக இயக்குனர் பாலா எந்த ஒரு கதாநாயகனையும் வைத்து வேலை வாங்கிவிடுவார். அந்த வகையில் ஆர்யாவையும் அதிகமாக வேலை வாங்கினார். இந்த படத்திற்காக ஆர்யா நிஜமாகவே பெரும் தாடியை வளர்த்திருந்தார்.
படப்பிடிப்பு முடியும் வரை தாடியை எடுக்கவேயில்லை. இதனால் ஆர்யா பெரும் அவஸ்தைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. பட வேலைகள் முடிந்த பிறகும் கூட இயக்குனர் பாலா சொன்னால் தான் தாடியை எடுக்க வேண்டும் என்கிற சூழ்நிலை ஆர்யாவிற்கு.
இந்த நிலையில் ஒரு நாள் ஆர்யாவிற்கு போன் செய்த பாலா தாடியை நீக்கி கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஆர்யா நண்பர்களை அழைத்து அனைவருக்கும் பார்ட்டி வைத்து அவர்கள் முன்னிலையிலேயே தாடியை எடுத்துள்ளார்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips