வளர்ந்து வரும் தமிழ் நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறார் நடிகர் சந்தானம். தொடர்ந்து சந்தானம் நடிக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. குறிப்பாக அவர் நடிக்கும் பேய் படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.
காமெடி நடிகராக சந்தானம் நடித்து வந்த காலக்கட்டத்தில் அவரின் முக பாவனைகள் உடல் மொழிகள் எல்லாமே இப்போது இருப்பதை விட மாறுப்பட்டு இருந்தன. ஆனால் கதாநாயகனாக நடிக்க துவங்கிய பிறகு அதற்கு தகுந்தாற் போல சந்தானம் நடிக்க துவங்கினார்.
இந்த நிலையில் சந்தானம் மற்றும் ஆர்யா இருவருமே நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்யா தயாரிப்பில் சந்தானம் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் டெவில்ஸ் டபுள்ஸ் நெக்ஸ் லெவல். இந்த திரைப்பட விழாவில் சந்தானம் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
அதில் அவர் கூறும்போது ஆர்யா என்னிடம் ஒரு விஷயம் கூறினான். காமெடி செய்துக்கொண்டிருந்தப்போது ரொம்ப ஜாலியா இருப்ப. இப்ப அப்படி இல்லையே என கேட்டான். நான் அவனிடம் நிறைய கமிட்மெண்ட் இருக்குடா. முன்ன மாதிரி இருக்க முடியல என கூறினேன்.
உடனே ஆர்யா இந்த ஒரு வருஷத்துக்கு உன் கமிட்மெண்ட் எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன். நீ படத்தில் மட்டும் கவனம் செலுத்து என கூறினான். எனவே இந்த படம் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என கூறியுள்ளார் சந்தானம்.