Tag Archives: actor suri

காமெடி பண்றவன் தானேன்னு குறைச்சி எடை போட்டுடாதீங்க!.. கெத்து காட்டிய சிவகார்த்திகேயன்!.

விஜய் டிவியில் காமெடி தொகுப்பாளராக இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் கதாநாயகனாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். பொதுவாக சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் காமெடி திரைப்படங்களாகதான் இருந்தன.

மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல், ரஜினி முருகன் என பல படங்கள் காமெடி படங்களாகவே இருந்தன. இப்போதுதான் கனா, டாக்டர் மாதிரியான படங்களில் கொஞ்சம் சீரியஸாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் அடுத்து நடிக்க போகும் அமரன் திரைப்படத்திலும் கூட சீரியஸாகவே நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சூரியோடு நிறைய படங்களில் நடித்துள்ளார். சூரிக்கும் இவருக்கும் நல்ல நட்பு உண்டு. எனவே சூரி, சசிக்குமார் சேர்ந்து நடிக்கும் கருடன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்தார் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan

அவர் அதில் பேசும்போது, “சூரியுடன் நான் படங்கள் நடிக்கும் போது எல்லாம் அவரை கதாநாயகனாக பலமுறை நடிக்க சொல்லியுள்ளேன். ஆனால் அவர் இப்பவே நல்லாதான்பா போயிட்டு இருக்கு என கூறுவார். பிறகு ஒரு நாள் அவரே வந்து தம்பி எனக்கு கதாநாயகனா நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு.

வெற்றிமாறன் படம். ஆனா நடிக்குறதுக்கு பயமா இருக்கு என கூறினார். அண்ணே கண்ணை மூடிக்கிட்டு நடிச்சி கொடுத்து வாங்கன்னு சொன்னேன். அதுல நடிக்குறது ஓ.கே தம்பி அதுக்கு பிறகு பட வாய்ப்பு வருமான்னு கேட்டார்.

ஆனால் வரிசையா எத்தனை படத்தில் நடிச்சிட்டார் பாருங்க. காமெடி பண்ற நடிகரால் எல்லா விதமான நடிப்பையும் வெளிப்படுத்த முடியும்னு சூரி அண்ணே காட்டியிருக்காரு” என பேசியிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனும் கூட காமெடியனாக இருந்து சினிமாவில் உச்சத்தை தொட்டவர் என்பதால் அதை கொஞ்சம் பெருமிதத்தோடுதான் கூறியிருந்தார் சிவகார்த்திகேயன்.

முதல் முதலில் நான் நடிக்கவிருந்த படம்!.. ஆனால் ஆர்யாவுக்கு வாய்ப்பு கிடைச்சிட்டு!.. பதிலுக்கு சூரி செஞ்சதுதான் ஹைலைட்!..

Actor Soorie: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் யாரும் யோசிக்காத அளவிலான உயரத்தை தொட்டிருக்கிறார் நடிகர் சூரி.

விடுதலை திரைப்படம்தான் சூரியின் வாழ்க்கையை மாற்றி அமைத்த திரைப்படம் என கூறலாம். சிவகார்த்திகேயனை போல் சாதாரண திரை கதைகளை தேர்ந்தெடுக்காமல் சூரி தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் எல்லாமே உலக அளவில் பிரபலமாகும் கதைகளாக இருக்கின்றன.

விடுதலை திரைப்படத்தை பல உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட்டு அந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து சூரி நடித்த கொட்டுக் காளி திரைப்படம் தொடர்ந்து நிறைய திரைப்பட விழாக்களில் வெளியாகி வருகிறது அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Soori at Marudhu Press Meet

அடுத்து இவர் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இப்படியாக சூரி தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே வித்தியாசமாக இருப்பதால் வெகு சீக்கிரத்திலேயே பெரும் உயரத்தை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப வாழ்க்கை

ஆனால் ஆரம்பத்தில் சூரி சினிமாவுக்கு வந்த பொழுது ஒரு சின்ன கதாபாத்திரமாவது கிடைக்காதா? என்று ஏங்கிய நாட்களும் உண்டு. ஆர்யா நடித்த கள்வனின் காதலி திரைப்படம் துவங்க இருந்தபோது அந்த படத்திற்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதற்கு ஆடிஷன் நடந்தது.

அப்பொழுது அங்கு சென்ற சூரி சாப்பிடாமல் சென்றதால் அங்கேயே மயங்கி விழுந்து விட்டார். பிறகு அவரை அமர வைத்து ஆறுதல் கூறி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இருந்தாலும் அன்று மயக்கம் அடையவில்லை என்றால் அந்த படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று மனம் வருந்தினார் சூரி.

அதன் பிறகு அவர் நிறைய திரைப்படங்கள் நடிக்க துவங்கிய பிறகு அவருக்கென்று ஒரு அலுவலகம் அமைக்க வேண்டி இருந்தது. அப்பொழுது கள்வனின் காதலி படத்தின் ஆடிஷன் நடந்த அந்த அலுவலகத்தையே தன்னுடைய அலுவலகமாக வாங்கினார் சூரி. அது தனக்கு எப்போதுமே பழைய நினைவு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் என்று வாங்கியதாக ஒரு பேட்டியில் அவர் கூறி இருக்கிறார்.

அந்த பட கதாபாத்திரம் எனக்கு புடிச்சி பண்ணுனேன்… ஆனா ரொம்ப ஃபேமஸ் ஆச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த சூரி!..

தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவரும் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சூரி. கிட்டத்தட்ட பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, அதன் பிறகு ஒரு வழியாக காமெடியனாக வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் சூரி.

அதன் பிறகு தொடர்ந்து களவாணி இன்னும் பல படங்களில் நடித்து தனக்கான அடையாளத்தை உருவாக்கினார். சூரி பொதுவாக கிராமம் தொடர்பான கதைகளில் மிகவும் ஒத்துப்போவார், ஏனெனில் அவரது பேச்சு வழக்கு கிராம மக்களின் பேச்சு வழக்கோடு ஒத்துப் போகும் என்பதால் களவாணி மாதிரியான படங்கள் அவருக்கு மிக முக்கியமான படங்களாக அமைந்தன.

சூரியிடம் ஒரு பேட்டியில் பேசும் பொழுது ”உங்களுக்கு பிடித்து நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்த கதாபாத்திரம் எது?” என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த சூரி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் வரும் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது.

அப்பொழுது பெயிண்டர் ராஜேந்திரன் அவருடன் கூட இருக்கும் அவரது நண்பர் மற்றும் ராஜ் என்கிற மற்றொரு கதாபாத்திரம் இந்த மூன்று கதாபாத்திரத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது.

அந்த மூன்றில் குறைவான நேரம் மட்டும் வருகிற கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்தேன் ஏனெனில் அப்பொழுது எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன அதனால் ராஜ் கதாபாத்திரத்தை எடுத்து நடித்தேன். என கூறினார் சூரி. ஆனால் குறைவான நேரமே அந்த கதாபாத்திரம் வந்திருந்தாலும் கூட அது சூரிக்கு முக்கியமான ஒரு படமாகவே அமைந்தது.