Cinema History
அந்த பட கதாபாத்திரம் எனக்கு புடிச்சி பண்ணுனேன்… ஆனா ரொம்ப ஃபேமஸ் ஆச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த சூரி!..
தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவரும் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சூரி. கிட்டத்தட்ட பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, அதன் பிறகு ஒரு வழியாக காமெடியனாக வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் சூரி.
அதன் பிறகு தொடர்ந்து களவாணி இன்னும் பல படங்களில் நடித்து தனக்கான அடையாளத்தை உருவாக்கினார். சூரி பொதுவாக கிராமம் தொடர்பான கதைகளில் மிகவும் ஒத்துப்போவார், ஏனெனில் அவரது பேச்சு வழக்கு கிராம மக்களின் பேச்சு வழக்கோடு ஒத்துப் போகும் என்பதால் களவாணி மாதிரியான படங்கள் அவருக்கு மிக முக்கியமான படங்களாக அமைந்தன.
சூரியிடம் ஒரு பேட்டியில் பேசும் பொழுது ”உங்களுக்கு பிடித்து நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்த கதாபாத்திரம் எது?” என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த சூரி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் வரும் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது.
அப்பொழுது பெயிண்டர் ராஜேந்திரன் அவருடன் கூட இருக்கும் அவரது நண்பர் மற்றும் ராஜ் என்கிற மற்றொரு கதாபாத்திரம் இந்த மூன்று கதாபாத்திரத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது.
அந்த மூன்றில் குறைவான நேரம் மட்டும் வருகிற கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்தேன் ஏனெனில் அப்பொழுது எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன அதனால் ராஜ் கதாபாத்திரத்தை எடுத்து நடித்தேன். என கூறினார் சூரி. ஆனால் குறைவான நேரமே அந்த கதாபாத்திரம் வந்திருந்தாலும் கூட அது சூரிக்கு முக்கியமான ஒரு படமாகவே அமைந்தது.