தமிழில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக மாறியிருப்பவர் நடிகர் சூரி. விடுதலை திரைப்படம்தான் நடிகர் சூரிக்கு மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது.
அதற்கு பிறகு அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் எல்லாமே அதிக வரவேற்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கொட்டுக்காளி என்னும் திரைப்படத்தில் சுரி நடித்தார். அந்த திரைப்படம் உலக திரைப்பட விழாக்களுக்கு சென்று வருவதால் இன்னமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து தற்சமயம் சூரி நடித்திருக்கும் திரைப்படம்தான் கருடன். இந்த திரைப்படத்தில் சூரிதான் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். ஆனால் நடிகர் சசியும் இந்த படத்தில் நடித்துள்ளார்.
வசூல் நிலவரம்:
நேற்று திரையில் வெளியான இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று ஒரு நாள் மட்டும் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது கருடன் திரைப்படம்.
இந்த ஹிப் ஹாப் ஆதி, சந்தானம் மாதிரியான வளர்ந்து வரும் நடிகர்களின் முதல் நாள் கலெக்ஷனோடு ஒப்பிடும்போது இது அதிகம் என்றே கூறப்படுகிறது. வரும் நாட்களில் இன்னமும் அதிக வசூலை கொடுக்க உள்ளது கருடன் திரைப்படம்.