நடிகர் சூர்யா நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அதிக எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் கங்குவா.. கிட்டத்தட்ட பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வெளியான ஒரு திரைப்படமாக கங்குவா இருந்தது.
ஆனாலும் மக்களுக்கு அந்த படம் பிடிக்கவில்லை. ஆனால் அந்த படம் நிறைய எதிர்மறையான விமர்சனத்திற்கு உள்ளானது. பெரும் தோல்வியையும் கண்டது இந்த நிலையில் இது குறித்து நடிகை ஜோதிகா சமீபத்தில் பேசியிருக்கிறார்.
இந்த படம் வெளியான காலகட்டத்தில் இருந்து நடிகை ஜோதிகா கங்குவா திரைப்படத்திற்கு ஆதரவாகதான் பேசி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய போது கூட கங்குவா திரைப்படம் நல்ல திரைப்படம் தான்
மக்கள் தான் அதற்கு ஆதரவு தரவில்லை என்றும் ஜோதிகா பேசியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் பத்திரிக்கையாளர் அந்தணன்.
அதில் அந்தணன் கூறும் பொழுது ஜோதிகா கோபப்படுவதில் நியாயமே இல்லை. ஏனெனில் கங்குவா திரைப்படத்தில் அதிக சத்தம் இருந்தது. அதனால் அந்த திரைப்படத்தை பார்த்த பலருக்கும் காதுகளில் பாதிப்பு ஏற்பட்டது.
வீட்டில் ஓடிடியில் திரைப்படத்தை பார்த்தவர்கள் அந்த படம் அவ்வளவு மோசம் இல்லை என்று கூறினார்கள். ஏனெனில் அவர்களால் குறைந்த சத்தத்தில் அந்த படத்தை பார்க்க முடியும் என்கிற நிலை இருந்தது.
இப்பொழுது அடுத்து வரக்கூடிய படத்தை மக்கள் இதேபோல எதிர்மறையான விமர்சனத்தோடு பார்க்கப் போவது கிடையாது. அந்த படம் நன்றாக இருந்தால் இதே தமிழ் மக்கள் தான் பாராட்ட போகிறார்கள் எனவே இவர்கள் குறையை வைத்துக் கொண்டு தொடர்ந்து மக்களை திட்டுவது என்பது நியாயமற்ற செயலாகும் என்று கூறியிருக்கிறார் அந்தணன்.