Tag Archives: karakaatakaran

கனகாவின் வாழ்க்கையை கெடுத்த இரண்டு முக்கிய புள்ளிகள்!. இப்ப ஆவியோடும் பேசுறாங்களாம்!.

தமிழில் ஒரு வருடத்திற்கும் அதிகமாக ஓடி பெரும் ஹிட் கொடுத்த கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா. இந்த திரைப்படத்தில் முதலில் நடிகை சுகன்யாதான் கதாநாயகியாக நடிக்க இருந்தார்.

ஆனால் இயக்குனர் கங்கை அமரன்தான் கனகாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கனகாவிற்கு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வர துவங்கின. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

குடும்பத்தாலேயே வந்த பிரச்சனை:

ஆனால் அவரது குடும்பத்தினராலேயே அவரது வாழ்க்கை பிறகு மோசமான சம்பவமும் நடந்தது. கனகா அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே அவரது பெற்றோர்கள் தொடர்ந்து அவரை திரைப்படங்களில் நடிக்க செய்து வந்தனர் என்று கூறுகிறார் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா சிறு வயது முதலே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் வாய்ப்புகள் கிடைத்ததுமே தொடர்ந்து ரஜினிகாந்த் சரத்குமார் மோகன்லால் என்று பெரிய புள்ளிகளுடன் நடித்து வந்தார்.

ஆனால் 1989இல் சினிமாவிற்கு வந்த கனகா 2000-க்கு பிறகு மொத்தமாக சினிமாவில் இருந்து விலகிவிட்டார். ஏன் அவர் சினிமாவை விட்டு விலகினார் என்று பார்க்கும் பொழுது அவருடைய அம்மாதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

திருட்டு திருமணம்:

தொடர்ந்து அவர்களது வீட்டில் பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது என்று கூறப்படுகிறது. இதற்கு நடுவே கர்நாடகாவின் அரசியல் புள்ளி ஒருவருக்கு பணம் வாங்கிக் கொண்டு கனகாவை திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஏனெனில் கனகாவின் நட்சத்திரத்தில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அரசியல் வாழ்க்கையை அவருக்கு நன்றாக இருக்கும் என்று கூறிய காரணத்தினால் இந்த திருமணத்தை செய்திருக்கின்றனர். ஆனால் பேருக்கு மட்டும் தான் இந்த திருமணம் நடந்திருக்கிறது.

அதற்கு பிறகு கனகாவே அந்த தாலியை கழற்றி வைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான கனகா இப்போது வரை தனிமையில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு வீட்டு வேலைகளை செய்வதற்கு மட்டும் ஒரு நபர் வந்துவிட்டு செல்வார் என்று கூறப்படுகிறது.

இதற்கு நடுவே அவருடைய தந்தை மற்றும் தாய் இருவருமே இறந்து போக தற்சமயம் அவர்களுடைய ஆவிகளுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறுகிறாராம் கனகா. அந்த அளவிற்கு அவரது மனநிலை என்பது மிகுந்த மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

சமீபத்தில் அவரை சந்தித்த நடிகை குட்டி பத்மினி தனது நெடுநாள் தோழியை மீண்டும் சந்தித்ததாக பதிவிட்டிருந்தார். அதன் பிறகுதான் என்ன நிலையில் கனகா இருக்கிறார் என்பதே வெளி உலகத்திற்கு தெரிய தொடங்கியது.

அந்த காமெடி நடிகர் நடிச்சா நான் நடிக்கமாட்டேன்!.. கரகாட்டக்காரனில் இருந்து நடிகரை தூக்கிய ராமராஜன்..!

ராமராஜன் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். பெரும்பாலும் ராமராஜன் நடிக்கும் திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வந்தன. முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு இவர் வந்தப்போது இயக்குனர் ராம நாராயணனிடம் உதவி இயக்குனராகதான் வந்தார்.

அதற்கு பிறகுதான் அவருக்கு சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராமராஜன் கதாநாயகனாக நடிக்க துவங்கியப்போது அவர் பார்ப்பதற்கு கிராமங்களில் இருக்கும் இளைஞர்களை போலவே இருந்ததால் அவரை மக்கள் நேசித்தனர்.

மிக சீக்கிரத்திலேயே கமல், ரஜினிகாந்தை தாண்டிய ஒரு உச்சத்தை தொட்டார் ராமராஜன். இந்த நிலையில் அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படம் என்றால் அது கரகாட்டக்காரன் திரைப்படம்தான்.

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் முதலில் கவுண்டமணி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் நடிகர் எஸ்.எஸ் சந்திரன் தான். ஆனால் ராமராஜனும் எஸ்.எஸ் சந்திரனும் வேறு வேறு கட்சியில் அப்போது இருந்து வந்தனர். இது தொடர்பாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்தது.

எனவே அந்த கதாபாத்திரத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்கும்படி கூறியுள்ளார் ராமராஜன். ஆனால் படக்குழு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே எஸ்.எஸ் சந்திரன் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என உறுதியாக கூறிவிட்டார் ராமராஜன். அதன் பிறகுதான் படத்தில் கவுண்டமணியை நடிக்க வைத்துள்ளனர்.

என் படம் 450 நாள் ஓடுனப்ப இடையில் பத்து படம் சம்பவம் பண்ணுனுச்சு!.. இதெல்லாம் ராமராஜனுக்கு மட்டும்தான் நடந்துருக்கு!.

தமிழ் சினிமாவிலேயே எந்த ஒரு நடிகராலும் செய்ய முடியாத சாதனைகளை எல்லாம் செய்தவர்தான் நடிகர் ராமராஜன். பெரும்பாலும் ராமராஜன் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போது கூட்டம் அலைமோதும் நிலைதான் இருந்தது. ராமராஜன் படங்களின் முதல் நாள் ஓப்பனிங் கலெக்‌ஷனை பார்த்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களே ஆடிப்போன சம்பவங்கள் அப்போது நடந்தது.

ராமராஜன் முதலில் இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராகதான் பணிப்புரிந்து வந்தார். அப்போது இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. ஆனால்  எதிர்பாராத விதமாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ராமராஜன்.

karakaarta-kaaran

பார்ப்பதற்கு கிராமத்து ஆள் போல இருப்பதாலும், சூது வாது தெரியாத கதாபாத்திரமாக படங்களில் நடித்ததாலும் குறுகிய காலங்களிலேயே அவருக்கான ரசிக பட்டாளங்கள் அதிகரித்தது. இந்த நிலையில்தான் மொத்த தமிழ் சினிமாவையும் திருப்பி போடும் படமாக கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியானது.

400 நாட்களை தாண்டி ஓடிய கரகாட்டக்காரன் ஒரு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் அப்போது நடந்த இன்னொரு அதிசயத்தையும் ராமராஜன் கூறுகிறார். கரக்காட்டக்காரன் திரைப்படத்திற்கு பிறகு என்னுடைய நடிப்பிலேயே 10 திரைப்படங்கள் அந்த 400 நாட்களில் வெளியாகின.

கரகாட்டக்காரனோடு சேர்ந்து அவையும் கூட 100 நாட்கள் எல்லாம் ஓடி வெற்றி கொடுத்தன என்றால் மக்களின் ஆதரவுதான் அதற்கு காரணம் என்கிறார் ராமராஜன்