News
எல்லா படத்தையும் ஒரே நாள்ல ரிலீஸ் பண்ணுனா அதுக்கு என்ன மதிப்பு! – கோபமடைந்த ஆர்.ஜே பாலாஜி!
தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் முக்கியமானவர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி நடித்த அனைத்து படங்களும் இதுவரை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. அதே சமயம் டீசண்டான ஹிட்டும் கொடுத்துள்ளன.

எப்போதும் நகைச்சுவை கதாபாத்திரமாக நடிக்கும் ஆர்.ஜே பாலாஜி தற்சமயம் கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரமாக நடித்து கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் ரன் பேபி ரன். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.
ஆனால் இந்த படம் முந்தைய ஆர்.ஜே பாலாஜி திரைப்படங்களை போல ஹிட் கொடுக்கவில்லை. ஆவரெஜான வசூலையே கொடுத்தன. இதுக்குறித்து ஆர்.ஜே பாலாஜி பேசும்போது “மக்களை குறை கூற முடியாது. ஒரு நேரத்தில் பல படங்கள் வெளியாகும்போது அதில் அவர்களுக்கு பிடித்த படங்களுக்கு செல்கின்றனர். இதனால் எந்த படமும் அதிக வசூலை பெறுவதில்லை. மேலும் திரையரங்குகளும் குறைவாக கிடைக்கின்றன. ஒரே நேரத்தில் பல படங்களை வெளியிடுவதால் அந்த படங்களுக்கு மதிப்பே இல்லாமல் போகிறது” என கூறியுள்ளார்.
ஏனெனில் ரன் பேபி ரன் திரைப்படம் வெளியான அன்று பல படங்கள் வெளியாகின. அதனால் ரன் பேபி ரன் திரைப்படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. தயாரிப்பாளர்களே ஒரு படம் எப்போது வெளியாக வேண்டும் என முடிவு செய்கின்றனர். எனவே இதுக்குறித்து வருத்தமடைந்தார் ஆர்.ஜே பாலாஜி.
