சோகமா இருந்தது குத்தமா!.. ரோட்டில் போன கணவன் மனைவியிடம் சிக்கிய விஜய் சேதுபதி!..

Vijay sethupathi: வளர்ந்து வரும் தமிழ் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் சேதுபதி இருக்கிறார். பொதுவாக ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் அடுத்து வில்லனாக நடிப்பதற்கு மிகவும் யோசிப்பார்கள். ஏனெனில் வில்லனாக நடித்த பிறகு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயம் இருந்துக்கொண்டே இருக்கும்.

ஆனால் அப்படி எந்த ஒரு பயமும் இல்லாமல் தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்சமயம் ஜவான் திரைப்படத்தில் கூட வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வருவதற்கு மற்ற நடிகர்களை போலவே விஜய் சேதுபதியும் வெகுவாக கஷ்டப்பட்டார்.

Social Media Bar

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் நடித்த பிறகு அதிக வாய்ப்புகள் எதுவும் விஜய் சேதுபதிக்கு வரவில்லை. இதனால் அவர் மிகவும் கவலையில் இருந்தார். வீட்டில் இருந்தால் மனம் சங்கடமாக இருக்கும் எங்காவது வெளியில் செல்லலாம் என்று கடற்கரைக்கு சென்றவர் அங்கு தனியாக அமர்ந்திருந்தார்.

அப்போது ஒரு கணவன் மனைவி ஜோடி அந்த வழியாக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் விஜய் சேதுபதியை பார்த்த உடனேயே அடையாளம் கண்டுக்கொண்டனர். விஜய் சேதுபதியை சந்தித்த அந்த கணவர் சார் என் பொண்டாட்டியை பார்த்து ப்பா பேய் மாதிரி இருக்குன்னு ஒருமுறை சொல்லுங்க சார் என கூறியுள்ளார்.

அப்போது மன கஷ்டத்தில் இருந்தாலும் கூட மக்களுக்கு நம்மை தெரிந்துள்ளது என்கிற விஷயம் விஜய் சேதுபதிக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்துள்ளது. இதை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.