Actress
ராஷி கண்ணாவின் தரமான புகைப்படங்கள்!…
2019 ஆம் ஆண்டு வெளியான அயோக்யா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அயோக்யா திரைப்படமே தமிழில் இவருக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.
அதனை தொடர்ந்து சங்கதமிழன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். பிறகு நயன் தாரா நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்தில் சின்ன கதாபாத்திரம் என்றாலும் அது அவருக்கு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது. கிட்டத்தட்ட படத்தின் கதையை மாற்றி அமைக்கும் கதாபாத்திரமாக அது இருந்தது.
பிறகு அரணமனை 3 திரைப்படத்தில் நடித்தார். இதற்கு நடுவே தெலுங்கு படத்திலும் நடித்து வந்தார் ராஷி கண்ணா. இந்த நிலையில் இந்த வருடம் அவர் நடித்து வெளியான ஃபார்ஷி என்கிற வெப் சீரிஸ் நல்ல வெற்றியை பெற்றது.
தற்சமயம் ராஷி கண்ணா அசத்தும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.