நான் வீழ்வேனென்று நினைத்தாயா? –பதிலடி கொடுத்த சமந்தா!

தமிழில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா. தமிழில் வந்த கொஞ்ச நாட்களிலேயே பெரிய கதாநாயகர்களோடு வரிசையாக படம் நடித்தார்.

தற்சமயம் அவர் நடித்து வெளிவந்த யசோதா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தா முக்கிய கதாபாத்திரமாக நடித்த படமாக யசோதா உள்ளது. அடுத்ததாக சாகுந்தலம் என்கிற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படமும் கூட வருகிற பிப்ரவரி அன்று திரைக்கு வருகிறது.

இந்நிலையில் நேற்று சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் வெற்றி தியேட்டர் பேனர்களில் வரிசையாக கதாநாயகிகள் முக்கிய ரோலில் நடித்த படங்களின் பேனர்கள் இருந்தன. அதை ஷேர் செய்த சமந்தா “பெண்களின் எழுச்சி துவங்கியுள்ளது” என கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த நபர் ஒருவர் எழுவது விழுவதற்காகதான் என கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்த சமந்தா “விழுந்து மீண்டும் எழும்போது அது எங்களை வலிமையாக்கும்” என பதிலளித்துள்ளார்.

தற்சமயம் அவரது உடல் நல குறைவில் இருந்து தேறி வரும் சமந்தாவை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Refresh