Connect with us

21 வயசுலையே எனக்கு அது நடந்துடுச்சு..  ஆடிப்போயிட்டேன்.. சீக்ரெட்டை கூறிய கமல் பட நடிகை..!

News

21 வயசுலையே எனக்கு அது நடந்துடுச்சு..  ஆடிப்போயிட்டேன்.. சீக்ரெட்டை கூறிய கமல் பட நடிகை..!

Social Media Bar

தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை சிவரஞ்சனி. ஒரு காலகட்டத்தில் இவருக்கு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று நான்கு மொழிகளிலும் தொடர்ந்து வரவேற்புகள் வந்து கொண்டு இருந்தன.

1990ல் கன்னட சினிமாவில்தான் இவர் முதன்முதலாக அறிமுகமானார். அதற்கு பிறகு மிஸ்டர் கார்த்திக் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் சினிமாவில் தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, பொன்விலங்கு, கலைஞன், தாலாட்டு மாதிரியான நிறைய திரைப்படங்களில் வரும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் பேட்டியில் பேசும் பொழுது அவரது சொந்த வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்களை பேசி இருந்தார்.

sivaranjani

சினிமாவில் பிரபலம்:

அதில் சிவரஞ்சனி கூறும் பொழுது நான் நடித்த பல படங்களின் பாடல்கள் இப்பொழுது வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு 21 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது சினிமாவிற்கு வந்து சில காலங்களிலேயே திருமணம் ஆனதால் அதிக வருடங்கள் நான் சினிமாவில் நடிக்கவில்லை.

பிறகு எனக்கு குழந்தைகள் எல்லாம் பிறந்த பிறகு சினிமாவை விட்டு விலகி விட்டேன். அதற்கு பிறகு குழந்தைகள்தான் உலகம் என்கிற மனநிலை தான் எனக்கு இருந்தது என்று கூறி இருக்கிறார் சிவரஞ்சனி. உண்மையிலேயே 1990 இல் சினிமாவிற்கு வந்த சிவரஞ்சனி 1998ல் சினிமாவை விட்டு விலகினார்.

To Top