News
ஸ்விம்மிங் உடையில் அடுத்த படத்தில்.. இந்த வயசில் அதிர்ச்சி கொடுக்கும் நடிகை சுகன்யா..!
பாரதிராஜா மூலமாக புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுகன்யா. சுகன்யாவை பொறுத்தவரை அவர் திரைக்கு வந்து ஒரு சில திரைப்படங்களிலேயே அவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியது.
பார்ப்பதற்கு ஹோம்லி லுக்கில் இருக்கும் சுகன்யா மாடன் உடையிலும் சிறப்பாக இருப்பார். அதேபோல பாரம்பரிய உடையும் அவரது தோற்றத்திற்கு ஒத்துப்போகும் என்பதால் அனைத்து வித கதாபாத்திரங்களையும் எடுத்து நடிக்க கூடியவராக சுகன்யா இருப்பார்.

அதிகபட்சமான திரைப்படங்களில் அவரை புடவை கட்டிதான் பார்க்க முடியும். அவர் நடித்த திரைப்படத்தில் சின்ன கவுண்டர் திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். தன்னுடைய தனிப்பட்ட நடிப்பின் காரணமாக சிறப்பாக அந்த திரைப்படத்தில் அனைவரும் கவனிக்கும் ஒரு கதாபாத்திரமாக இருப்பார்.
சின்ன கவுண்டரில் பேமஸ்:
சின்ன கவுண்டர் திரைப்படத்தில் படம் முழுக்க புடவை தான் கட்டி இருப்பார் அந்த படத்தில் எந்த மாடர்ன் உடையும், கவர்ச்சி நடனமும் இருக்காது. இருந்தாலும் அந்த திரைப்படம் வெகுவாக பேசப்பட்ட ஒரு படமாக இருந்தது. அதேபோல திருமதி பழனிச்சாமி என்கிற திரைப்படத்திலும் அவரை முக்கிய கதாபாத்திரமாக வைத்துதான் கதை செல்லும்.

இந்த நிலையில் இந்தியன் என்கிற மாஸ் ஹிட் படத்தில் நடித்த பிறகும் கூட வாய்ப்புகளை இழந்த சுகன்யா. பிறகு திரைத்துறையில் குறைவான திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் இந்த நிலையில் தற்சமயம் ஒரு வெப் சீரிஸ் மூலமாக மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் சுகன்யா.
மீண்டும் வாய்ப்பு:
இந்த க்ரைம் த்ரில்லர் சீரிஸில் சுகன்யா கொஞ்சம் தைரியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதே சமயம் படத்தில் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் நடித்துள்ளாராம் சுகன்யா.
இளமை காலங்களிலேயே அவ்வளவு கவர்ச்சியாக நடிக்காத சுகன்யா இந்த வயதில் இப்படி நடிக்கிறாரே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
