Connect with us

மேக்கப் மேன் கார் ட்ரைவர்னு எல்லாம் பார்க்க மாட்டார்!.. சில்க் ஸ்மித்தா பற்றி பேசிய இயக்குனர்..!

silk smitha3

Cinema History

மேக்கப் மேன் கார் ட்ரைவர்னு எல்லாம் பார்க்க மாட்டார்!.. சில்க் ஸ்மித்தா பற்றி பேசிய இயக்குனர்..!

Social Media Bar

1980களில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதாவாகதான் இருக்க முடியும். பொதுவாக கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு இவ்வளவு வெளிப்படையாக ரசிக பட்டாளம் இருந்ததா என்பது சந்தேகம்தான்.

ஆனால் சில்க் ஸ்மிதாவிற்கு பெரிய ரசிக்கப்பட்டாளம் இருந்தது அவருக்காகவே திரைப்படத்தை பார்ப்பதற்கு வந்த கூட்டமும் அப்பொழுது உண்டு. கமல் ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களுடன் தொடர்ந்து நடித்த ஒரு கவர்ச்சி நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதாவாகதான் இருக்கும்.

சில்க் ஸ்மிதாவை பொருத்தவரை அவர் திரைப்படங்களில் கவர்ச்சியான ஒரு கதாபாத்திரமாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் அவரைப் போன்ற ஒரு நல்ல பெண்ணை பார்க்க முடியாது என்று கூறுகின்றனர் அவருடன் பழகியவர்கள்.

ரம்யா கிருஷ்ணன் கணவர்:

அந்த வகையில் இயக்குனரும் ரம்யா கிருஷ்ணனின் கணவருமான கிருஷ்ணா வம்சி சில்க் ஸ்மிதா குறித்து சில தகவல்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது சினிமாவில் இயக்குனர் ஆவதற்காக கடினமாக நான் உழைத்துக் கொண்டிருந்த சமயம்.

அப்பொழுது சினிமாவில் எனக்கு எந்த வேலை கொடுத்தாலும் அதை நான் செய்வதற்கு ஆயத்தமாக இருந்தேன். இந்த நிலையில் இயக்குனர் வரப்பிரசாத் ராவிடம் என்னை அறிமுகப்படுத்த ஒருவர் அழைத்துச் சென்றார்.

அந்த இயக்குனரின் திரைப்படத்தில்தான் அப்பொழுது சில்க் நடித்து கொண்டிருந்தார். அப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் நான் வேலை பார்ப்பதை பார்த்து சில்க் ஸ்மிதா என்னை பாராட்டினார். அதற்குப் பிறகு சில்க் ஸ்மிதாவும் சில திரைப்படங்களை தயாரித்தார்.

சில்க்குடன் பணிப்புரிந்த அனுபவம்:

அப்பொழுது அந்த திரைப்படங்களிலும் நான் பணிபுரிந்து இருக்கிறேன் அதற்கு பிறகு எனக்கு இயக்குனராகவாய்ப்பு கிடைத்தது. நான் திரைப்படங்கள் இயக்குவதற்கு சென்றுவிட்டேன். பிறகு பல வருடங்கள் கழித்து ஒருமுறை நான் ஸ்டூடியோவில் நின்று கொண்டிருந்த பொழுது ஒரு கார் எனக்கு முன்பு வேகமாக வந்து நின்றது.

அதிலிருந்து சில்க் ஸ்மிதா கீழே இறங்கினார். என்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார். அதை கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது நீங்கள் என்னை ஞாபகம் வைத்திருப்பதுதான் மேடம் ஆச்சரியம் என்று கூறினேன்.

பிறகு உங்களது திரைப்படம் நன்றாக இருந்தது அதை நான் பார்த்தேன் என்று கூறி என்னை வாழ்த்திவிட்டு சென்றார். சில்க் ஸ்மிதாவை பொருத்தவரை அவருடன் வேலை பார்க்கும் கார் டிரைவராக இருந்தாலும் சரி மேக் அப் மேனாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரையும் சமமாக நடத்தக்கூடியவர்.

ஏனெனில் ஏழையாக இருந்து சினிமாவிற்கு வந்தவர் சில்க் ஸ்மிதா என்று கூறுகிறார் இயக்குனர் கிருஷ்ணா வம்சி.

To Top