2025 ஆம் வருடம் துவங்கியது முதலே தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும்படியான பெரிய வெற்றி படங்களே அமையவில்லை.
இதுவரை ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் மொத்தமே இதுவரை 6 திரைப்படங்கள் தான் வெற்றி படங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
மற்ற திரைப்படங்கள் எல்லாமே ஆவரேஜ் வெற்றி மாதிரியான இடத்தில் தான் இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து நஷ்டத்தை கண்டு வருகின்றனர்.
இப்படியே போனால் தமிழ் தயாரிப்பாளர்கள் சினிமாவை விட்டு விலகும் சூழ்நிலை கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து டிராகன் திரைப்படம் வெற்றியை கொடுத்தது. குடும்பஸ்தன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து அஜித்துக்கு விடாமுயற்சி திரைப்படம் கைவிட்டாலும் குட் பேட் அக்லி ஓரளவு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் மாமன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல வெற்றியை தந்து இருக்கின்றன.
இவற்றை தவிர்த்து இந்த வருடம் வந்த படங்களில் வேறு எந்த படமும் பெரிய வெற்றியை பெறவில்லை என்று கூறப்படுகிறது.