Tamil Trailer
தீராத விளையாட்டு பிள்ளை படத்தையே திரும்ப எடுத்து வச்சி இருக்காங்க..! இவானா நடிப்பில் சிங்கிள் பட ட்ரைலர்..!
காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே சினிமாவில் தனிப்பட்ட வரவேற்பு உண்டு. அதனால்தான் சினிமாவில் என்ன ட்ரெண்ட் உருவானாலும் அது காதல் கதை அம்சம் கொண்ட கதை களங்களை பெரிதாக பாதிப்பது கிடையாது. மேலும் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு இது அதிக வரவேற்பை பெற்று தருகிறது.
காதல் கதை அம்சம் கொண்ட கதைகளில் கதாநாயகியை மிக அழகாக பார்க்க முடியும். இப்படியாக ஏற்கனவே லவ் டுடே திரைப்படம் மூலமாக திரைத்துறையில் பிரபலமானவர் நடிகை இவானா. இந்த படம் இவருக்கு எக்கச்சக்க வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் வர துவங்கின.
இந்த நிலையில் தற்சமயம் தெலுங்கு சினிமாவிலும் கூட இவருக்கு வரவேற்புகள் கிடைக்க துவங்கியுள்ளன. தற்சமயம் சிங்கிள் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இவானா. இந்த படத்தின் கதைப்படி நாயகன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலிக்கிறான்.
அதனை வைத்து கதை செல்கிறது. தமிழில் வந்த காத்து வாக்குல ரெண்டு காதல், தீராத விளையாட்டு பிள்ளை மாதிரியான திரைப்பட கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் ட்ரைலர் தற்சமயம் வெளியாகியுள்ளது.
