Connect with us

கமலை மாதிரி மோசமான ஒருத்தரை பார்த்தது இல்லை.. கடுப்பான நடிகை.. என்னவா இருக்கும்..!

kamal

Latest News

கமலை மாதிரி மோசமான ஒருத்தரை பார்த்தது இல்லை.. கடுப்பான நடிகை.. என்னவா இருக்கும்..!

Social Media Bar

சினிமா என்றால் எப்பொழுதும் சர்ச்சைகளுக்கும். கிசுகிசுகளுக்கும் பஞ்சம் இருக்காது. எவ்வளவு பெரிய வளர்ந்த நடிகராக இருந்தாலும் அவரை சுற்றி ஏதோ ஒரு வகையில் ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்புத் துறையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். கமல்ஹாசன் 10 தமிழக அரசு திரைப்பட விருதுகளையும், நான்கு ஆந்திர அரசின் நந்தி விருதுகள் மற்றும் 19 பிலிம்ஸ் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடன அமைப்பாளர், திரைக்கதையாசிரியர் போன்ற பன்முகங்களைக் கொண்டவர். மேலும் இவருக்கு சினிமா சிறையில் முக்கிய பங்கு ஆற்றியதற்காக பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

60 ஆண்டுகளைக் கடந்தும் தற்பொழுது வரை தனக்கென தனி மார்க்கெட்டை வைத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். அவரைப் பற்றிய ஒரு சர்ச்சை தற்பொழுது ஒரு நடிகை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யார் அந்த நடிகை

தாடி பாலாஜியின் மனைவி பெயர் தான் நித்யா. இவர் சமீப காலங்களாக நடிகர் தாடி பாலாஜியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்தான் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் பற்றி ஒரு பரபரப்பான சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார்.

தாடி பாலாஜியின் மனைவி நித்யா தனது மகள் போஷிக்காவுடன் சென்னை மாதவரத்தில் வசித்து வருகிறார்.

nithya balaji

தாடி பாலாஜி மற்றும் நித்யா இருவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் சூழலில் நித்யா கமலை பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார்.

கமல் பற்றி சர்ச்சையான பேச்சு

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த தாடி பாலாஜி மற்றும் நித்யா ஆகியோர் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டனர்.

அப்பொழுது அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், பாலாஜியிடம் கெட்ட பழக்கவழக்கங்களை விட்டுவிட்டு மனைவி, குழந்தைகளுடன் வாழ வேண்டும் என அறிவுரை சாென்னார்.

kamal

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நித்யாவிடம், கமலை பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு நித்யா “கமலை பற்றி என்னிடம் எந்த கேள்வியும் கேட்காதீர்கள். அப்புறம் நான் எல்லாவற்றையும் சொல்லி விடுவேன். அவரைப்போல ஒரு மோசமானவரை நான் பார்த்ததே இல்லை” என நித்யா கூறியிருக்கிறார்.

இவரின் பேச்சு தற்பொழுது சர்ச்சை கிளப்பி உள்ளது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top