பூசாரிக்கு புல்லட் கேக்குதா? – புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த விஜய்!

நடிகர் விஜய் தனது அரசியல் பாதைக்காக நடத்தி வரும் இயக்கம்தான் விஜய் மக்கள் மன்றம். இதன் வழியாக ரசிகர்களுக்கும் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார் விஜய்.

Social Media Bar

இந்த இயக்கத்தின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். சில நாட்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து ஒரு மீட்டிங் நடத்தப்பட்டது. அதற்கு வந்த நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். இது வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் இது அடிமை மக்கள் இயக்கம் என விஜய் மக்கள் இயக்கத்தை விமர்சனம் செய்ய துவங்கிவிட்டனர். இவ்வளவு பெரும் நாயகனாக இருந்தும் கூட விஜய் யாரையும் தனது காலில் விழ சொன்னதில்லை. பொதுவாக அப்படியான விஷயங்களை விஜய் எதிர்ப்பார்ப்பதில்லை என கூறப்படுகிறது.

சாமியே பல்லக்கில் போகுது. பூசாரிக்கு புல்லட் கேக்குதா? என்னும் வசனத்திற்கு ஏற்ப நிர்வாக தலைவராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் இப்படி செய்திருப்பது விஜய்க்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே புஸ்ஸி ஆனந்தை அழைத்த விஜய் அவரை கண்டித்துள்ளார். இனி இப்படியான விஷயங்களை செய்ய கூடாது என எச்சரித்துள்ளார்.