Actress
புடவையை இப்படி கூட கட்டலாமா? – பூங்குழலியின் அழகிய புகைப்படங்கள்
மலையாள சினிமாவில் 2015 ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி. வருமானத்தை பொறுத்தவரை தமிழ் சினிமாவை விடவும் மலையாள சினிமாவில் சம்பளம் குறைவு என்றே கூறலாம்.

எனவே மலையாள நடிகைகள் பலரும் தமிழ் அல்லது தெலுங்கு சினிமாவில் பிரபலமாவதற்கே முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமியும் கூட ஆக்ஷன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

விஷால் நடித்த ஆக்ஷன் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் இவர் தோன்றினார். அதன் பிறகு சில படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து புத்தம் புது காலை எனும் சீரிஸ், கார்கி, கேப்டன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். பூங்குழலி கதாபாத்திரம் பலரையும் கவரும் வகையில் இருந்தது. இதனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இவர் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.
