News
அடுத்த படம் குழந்தைகளுக்காக எடுக்க போறேன்? – மாரி செல்வராஜ்!
வித்தியாசமான கதைகளம் மூலம் சமூக நீதி மற்றும் சமூகத்திற்கு தேவையான கருத்தை முன் வைப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இதுவரை தமிழில் மொத்தமே 3 படங்கள்தான் இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியும் அளவிற்கு பிரபலமாகவே இவர் இருக்கிறார்.
முதன் முதலாக இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். சாதியம் சார்ந்த விஷயங்களை தனது படத்தின் வழியே பேசுவதை வழக்கமாக கொண்டவர்.
தற்சமயம் உதய்நிதியை கொண்டு மாமன்னன் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்டு வாழை என்கிற திரைப்படத்தை இயக்க போவதாக கூறியுள்ளார்.
மாமன்னன் திரைப்படத்தின் வேலைகள் முடிந்த நிலையில் தற்சமயம் வாழை படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. உதய்நிதி முதல் க்ளாப்பை அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார்
