கட்டா குஸ்தி வெறும் விளையாட்டு சார்ந்த திரைப்படம் மட்டும் கிடையாது? – விஷ்ணு விஷால் விளக்கம்.

தமிழ் சினிமாவில் தற்சமயம் வரிசையாக வாய்ப்புகளை பெற்று வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடித்த படங்களில் வெண்ணிலா கபடி குழு இவருக்கு பேர் வாங்கி தந்த திரைப்படம் எனலாம்.

அதற்கு பிறகு அவர் நடித்த குள்ளநரி கூட்டம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் சுறு சுறுப்பான கதை களத்தை கொண்ட படமாக குள்ளநரி கூட்டம் இருந்தது.

அதன் பிறகு அவர் நடித்த ராட்சசன் திரைப்படமும் கூட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மீண்டும் விளையாட்டை முதன்மையாக கொண்டு விஷ்ணு விஷால் படம் நடித்து வருகிறார். 

இந்த படத்திற்கு கட்டா குஸ்தி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வர இருக்கிறது. இயக்குனர் செல்லா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே இவரது சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

இந்த படம் பற்றி விஷ்ணு விஷால் கூறும்போது “இது விளையாட்டு சார்ந்த ஒரு படம் மட்டும் அல்ல.ஏராளமான நகைச்சுவை உள்ளன. படம் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Refresh