சிவாஜி கணேசனையே அசர வைத்த நடிப்பு.. வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த நடிகர் திலகம்… எந்த நடிகருக்கு தெரியுமா?

Actor Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் எப்போதுமே சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். அவருக்கு இணையாக தன்னை கூறிக்கொள்ளும் இன்னொரு நடிகர் இதுவரை தமிழ் சினிமாவில் வரவில்லை. கமல்ஹாசனை கூட சிவாஜி கணேசனுக்கு அடுத்து ஒரு சிறந்த நடிகராகதான் ஏற்றுக்கொள்கிறார்களே சிவாஜி கணேசனுக்கு சமமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

சிவாஜி கணேசன் நடித்த பெரும்பாலான படங்களில் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில அவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். நடிப்பை ஒரு தொழில் என்பதையும் தாண்டி அதன் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் சிவாஜி கணேசன்.

புது புது நடிப்பு உக்திகளை கண்டறிந்து தன்னை மேம்படுத்தி கொள்வதற்காக அவர் அடிக்கடி நாடகங்களுக்கு செல்வதுண்டு. அப்படியாக ஒருமுறை ஒரு நாடகத்திற்கு சென்றார். நாடகத்தின் கதை இதுதான் ஒரு விஞ்ஞானி மனிதர்களை இளமையாக்கும் மருந்தை கண்டறிகிறார். அந்த மருந்தை தெரியாமல் அவரது மனைவி ஒரு குடம் தண்ணீரில் கலந்துவிடுகிறார்.

sivaji ganesan
sivaji ganesan
Social Media Bar

இப்போது அந்த நீரை குடிப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே கதை. அதில் ஒவ்வொருவராக நடிக்கும்போது நடிகர் சித்ராலயா கோபு ஒரு பாடகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது வந்த கோபு அந்த நீரை குடித்துவிட்டு அதுவரை கருநாடக சங்கீதத்தில் பாடியவர் திடீரென வெஸ்டர்ன் இசையில் பாடிக்கொண்டே ஆட துவங்குவார்.

அந்த நடிப்பை பார்த்து அசந்து போனார் சிவாஜி கணேசன். பிறகு அவரை வீட்டிற்கு அழைத்து நாடகத்தில் ஆடிக்கொண்டே பாடுவது எவ்வளவு சிரமம் என எனக்கு தெரியும். அதை சிறப்பாக செய்திருந்தீர்கள் என வாழ்த்தி அவருக்கு விருந்து வைத்தார் சிவாஜி கணேசன்.