Hollywood Cinema news
ஸ்பைடர்வர்ஸ் குழந்தைகளுக்கான திரைப்படம் கிடையாது! – அபாய சங்கு ஊதிய அனிமேட்டர்!
90ஸ் கிட்ஸ்களில் துவங்கி 2கே கிட்ஸ்கள் வரை பெரும் ரசிக பட்டாளத்தை கொண்ட மார்வெல் காமிக்ஸின் முக்கியமான கதாநாயகன் ஸ்பைடர்மேன்.
திரைப்படமாக, காமிக்ஸாக, கார்ட்டூன் தொடர்களாக என பல பரிமாணங்களில் குழந்தைகளை மகிழ்வித்த கதாபாத்திரம் ஸ்பைடர் மேன்.
2021 ஆம் ஆண்டு சோனி நிறுவனம் பல ஸ்பைடர் மேன்களை ஒன்றிணைக்கும் விதமாக ஸ்பைடர் மேன் இன் டூ தி ஸ்பைடர் வெர்ஸ் என்கிற திரைப்படத்தை துவங்கி வைத்தது.
மல்டி டைமன்ஷன் கருவை கொண்டு இந்த கதை எழுதப்பட்டது. பூமி போலவே பல பூமிகள் இருப்பதாகவும் அங்கும் இதே போல ஸ்பைடர் மேன் இருப்பதாகவும் கதை செல்லும்.
பல ஸ்பைடர் மேன்கள் ஒன்றினைந்து ஒரு வில்லனை அழிப்பதே கதை. இதன் முதல் பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு சில மாதங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வெளியானது.
இதில் இந்தியாவை சேர்ந்த பவித் பிராபகர் என்னும் மும்பையை சேர்ந்த ஸ்பைடர் மேனும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பணிப்புரிந்த முக்கிய அனிமேட்டரான ஏரே சாண்டோஸ் கூறும்போது, ஸ்பைடர் வெர்ஸின் கதைக்களம் பெரியவர்களுக்கு ஏற்றாற் போல எழுதப்பட்டுள்ளது.
எனவே இந்த படத்தை புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு கடினமாக இருக்கும். எனவே இது குழந்தைகளுக்கான படம் கிடையாது என கூறியுள்ளார்.