என்னய்யா செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி உக்காந்துருக்க.. இயக்குனர் செய்கையால் கடுப்பான வாலி!..
நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அவர் பெரும் உயரத்தை தொடுவதற்கு சில முக்கியமான திரைப்படங்கள் அதிகமாக உதவின. அப்படியான திரைப்படங்களில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தீனா திரைப்படம் முக்கியமான படம் ஆகும்.
முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் அஜித் இருவருக்குமே முக்கியமான படமாக அமைந்தது. இந்த திரைப்படத்திற்கான பாடல் வரிகளை பாடலாசிரியர் வாலிதான் எழுதினார்.
வாலியிடம் நேரில் சென்று பாடலுக்கான தகவல்களை கொடுத்து பாடல் வரிகளை எழுத சொல்லி இருந்தார் ஏ.ஆர் முருகதாஸ். வாலியும் வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில என்று பாடல் வரிகளை எழுதி இருந்தார்.
அதை ஏ.ஆர் முருகதாஸை அழைத்து அவரே பாடியும் காட்டினார். அதைக் கேட்டு அதிர்ச்சியாக அப்படியே அமர்ந்திருந்தார் ஏ.ஆர் முருகதாஸ். இரண்டு நிமிஷம் அவர் அப்படியே அமர்ந்திருப்பதை பார்த்த வாலி என்னையா இது பாட்டு பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லு பிடிக்கலன்னா பிடிக்கலைன்னு சொல்லு அதை விட்டுட்டு செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி உக்காந்துருக்க என்று கேட்கவும் இல்ல படம் முழுக்க அஜித் வாயில் வைத்து இருப்பார் அது எப்படி உங்களுக்கு தெரிந்தது என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.
அந்த அளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் வரிகளை எழுத கூடியவராக வாலி இருந்திருக்கிறார்.